மெக்சிகன் திரையுலகின் பிரபல நடிகரும் நடனக் கலைஞருமான ஜெரார்டோ டாரசெனா தனது 55-வது வயதில் ஜனவரி 31, 2026 அன்று காலமானார். மெல் கிப்சனின் இயக்கத்தில் 2006-ல் வெளியான ‘அபோகலிப்டோ’ படத்தில் ‘மிடில் ஐ’ என்ற வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் அவர் உலகளவில் பிரபலமானார். அவரது மறைவை மெக்சிகன் தேசிய நடிகர் சங்கம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
சுமார் 30 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையில், ஜெரார்டோ ‘மேன் ஆன் ஃபயர்’, ‘தி மெக்சிகன்’ போன்ற ஹாலிவுட் படங்களிலும், புகழ்பெற்ற ‘நார்கோஸ்: மெக்சிகோ’ மற்றும் ‘குயின் ஆஃப் தி சவுத்’ (Queen of the South) போன்ற வலைத்தொடர்களிலும் முத்திரை பதித்துள்ளார். இவரது மரணத்திற்கான துல்லியமான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், நீண்டகாலமாக இருந்த உடல்நலக் குறைபாடு காரணமாக அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இவரது மறைவுக்கு உலகெங்கிலும் உள்ள திரைத்துறையினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
