அதிமுகவின் கதவை மூடிய EPS… TVK-க்கு நோ “திமுகவே தஞ்சம்” அமைச்சர் பதவி ஆசையில் ஓபிஎஸ்..? அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு…!!

By Soundarya on மாசி 1, 2026

Spread the love

அதிமுகவில் மீண்டும் இணைவதற்கான கதவுகளை எடப்பாடி பழனிசாமி (EPS) முழுமையாக மூடிவிட்டதால், ஓ.பன்னீர்செல்வம் (OPS) தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்து ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனையில், திமுகவில் இணைவதே சரியான முடிவாக இருக்கும் என அவரது ஆதரவாளர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.

திமுகவில் இணைந்தால் ஓபிஎஸ்-க்கு அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதோடு, அவரது ஆதரவாளர்கள் சிலரும் எம்.எல்.ஏ-வாக முடியும் என நிர்வாகிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதேசமயம், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் (TVK) கூட்டணி அமைத்தால், அது அதிமுகவின் தோல்விக்கு வேண்டுமானால் காரணமாக இருக்குமே தவிர, தங்களுக்குப் பெரிய அளவில் அரசியல் பலன் தராது என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.