நான் திருநங்கையா..? எல்லோரும் அப்படித்தான் சொல்றாங்க.. நடிகை குஷ்புவின் மகள் அனந்திதா வேதனை..!!

By Soundarya on ஆனி 18, 2026

Spread the love

பிரபல நடிகை குஷ்புவின் மகள் அனந்திதா, தான் உடல் எடையைக் குறைத்த பிறகு சமூக வலைதளங்களில் தன்னை ‘திருநங்கை போல் இருப்பதாக’ பலர் கேலி செய்து வருவதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார். அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் சோசியல் மீடியாவில் பரவும் வெறுப்புப் பேச்சுக்கள் குறித்துப் பேசிய அவர், தான் பருமனாக இருந்தபோதும் இதேபோல் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். நெட்டிசன்களின் இத்தகைய இரக்கமற்ற மற்றும் எல்லை மீறிய உருவக் கேலிகள் தனக்கு மிகுந்த மன வேதனையையும் ஆதங்கத்தையும் அளிப்பதாக அவர் மனம் திறந்துள்ளார்.

மேலும், தனது உடல் எடை குறைப்பு குறித்து இணையத்தில் பரவி வரும் தேவையற்ற வதந்திகளுக்கும் அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தான் உடல் எடையைக் குறைக்க ‘ஒசெம்பிக்’ போன்ற உடல் எடை குறைப்பு ஊசிகளைப் பயன்படுத்தியதாகப் பரவும் தகவல்கள் முற்றிலும் பொய் என்று அவர் மறுத்துள்ளார். முறையான உடற்பயிற்சிகள் மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்கள் மூலமாகவே தான் கடினமாக உழைத்து உடல் எடையைக் குறைத்ததாக அனந்திதா அந்த நேர்காணலில் தெளிவாக விளக்கியுள்ளார்.