மைக்கேல் ஜாக்சனுக்கே டஃப் கொடுத்து அவருடன் ஆடிய பெண்.. வைரல் வீடியோவின் பின்னனி இதான்..

By John

Updated on:

Yamuna sangarashivam

பாப் கிங் என்று அழைக்கப்படும் மைக்கேல் ஜாக்சன் 20-ம் நூற்றாண்டின் முக்கிய நபர்களுள் ஒன்றாக கருதப்படுகிறார். அமெரிக்காவைச் சேர்ந்த பாப் இசைக் கலைஞர் மைக்கேல் ஜாக்சன் உதடுகளை உச்சரிக்காதவர் இந்த உலகில் இல்லவே இல்லை எனலாம். நாம் சும்மா நடனம் ஆடினாலோ, பாடினாலோ இவர் பெரிய மைக்கேல் ஜாக்சன் என்று அவரை ஒவ்வொரு தருணத்திலும் நினைவு கூர்கிறோம்.

அவரின் மூன்வாக் நடனத்திற்கு அடிமையாகத நடன ரசிகர்களே இல்லை எனலாம். இனவெறிக்கு எதிரான பாடல்களைப் பாடி புகழின் உச்சிக்கே சென்று இன வெறி தடைகளை உடைத்தார். இன்றும் அவரது ஆல்பங்கள் உலக அளவில் விற்பனையில் சக்கைப் போடு போடுகிறது.  இளம் வயதிலேயே இசையின் மீதும், நடனம் மீதும் அதிக நாட்டம் கொண்டிருந்தவர் ஜாக்சன். 11வது வயதிலேயே தன் சகோதரர்களுடன் இணைந்து ‘தி ஜாக்சன் 5’ என்ற இசை நிகழ்ச்சி மூலம் தன்னுடைய பாப் இசையை தொடங்கினார்.

   

மேலும், பாடல் எழுதுவது, அதற்கு இசையமைப்பது, பாடலுக்கு ஏற்றாற் போல் நடனம் ஆடுவது, இடை இடையே கொஞ்சம் நவரச நடிப்பு என இடையே திறமையையும் கலந்து ‘பாப்’ என்ற புதிய உலகை மைக்கல் ஜாக்சன் படைத்தார். மக்களின் மத்தியில் 40 ஆண்டு காலமாக புகழ் பெற்றவராக வாழ்ந்து வந்தார் மைக்கல் ஜாக்சன்.

Jackson
jackson

அண்மையில் மைக்கேல் ஜாக்சனுடன் இணைந்து தமிழ்ப் பெண் ஒருவர் ஒடிசி நடனம் ஆடிய வீடியோ ஒன்று வைரல் ஆனது. அவர் யாரென்று இணைய உலகம் தேடத் தொடங்கியது. 1991 ஆம் ஆண்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மைக்கேல் ஜாக்சனுடன் இணைந்து ஒடிசி நடனம் ஆடிய பெண்ணின் பெயர் யமுனா சங்கர சிவம். இவர் வட இலங்கை பகுதியில் பிறந்தவர். அங்கே தான் வளர்ந்தார். தன்னுடைய தொடக்கப்பள்ளி, உயர்நிலைக் கல்வி அனைத்தையும் கொழும்புவில் படித்தார். பின் இவர் அனைத்தையும் பல்கலைக்கழக படிப்பை அமெரிக்காவில் படித்தார். அங்கு இவர் படித்துக் கொண்டிருக்கும் போது தான் மைக்கேல் ஜாக்சன் மூலமாக ஒரு அரிய வாய்ப்பு வந்தது.

இட்லி, தோசை விற்றே கோடிகளில் சம்பாதிக்கும் தம்பதி.. இதான் இவங்க பிஸினஸ் சீக்ரெட்-ஆ?

அதாவது 1991 ஆம் ஆண்டில் Black and White என்ற நிகழ்ச்சியை நடத்த மைக்கேல் ஜாக்சன் திட்டம் போட்டார். இதில் நடிப்பதற்கும் நடனம் ஆடுவதற்கும் கலைஞர் தேவை என்று பத்திரிகையில் மைக்கல் ஜாக்சன் விளம்பரமும் செய்திருந்தார். இதைப் பார்த்த பல்லாயிரக்கணக்கான பேர் விண்ணப்பம் செய்திருந்தார்கள். இதில் 3000 பேர் நேர்முகத் தேர்வில்அழைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் யமுனா.

Yamuna
yamuna

இவருடைய நாட்டிய நடினங்கள் பார்வையாளர்களை மட்டுமல்ல நடுவர்களையும் கவர்ந்திருந்தது. மேலும், இந்த நிகழ்ச்சியில் மைக்கேல் ஜாக்சன் உடன் யமுனாவும் ஒடிசி நடனம் ஆடி இருந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது இவர் நியூயார்க்கில் உள்ள நாசரேத் கல்லூரியில் ‘மானுடவியல் பேராசிரியராகவும், சமூகவியல் மற்றும் மானுடவியலில் பெண்கள் மற்றும் பாலின ஆய்வுகள் இளங்கலை திட்டத்தின் இயக்குநராகவும் அமெரிக்காவில் பணிபுரிந்து வருகிறார்.

author avatar