பொதுவாக சீரியல் என்றாலே அனைவரும் விரும்பி பார்ப்பதுண்டு. இல்லத்தரசிகளுக்கு பொழுதுபோக்கு என்றாலே சீரியல் தான் .இதனால் டிவி சேனல்கள் அனைத்துமே போட்டி போட்டுக் கொண்டு புதுப்புது செயல்களை களம் இறக்கி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் எப்போதுமே மாலையில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு மட்டும் தான் டிஆர்பி ரேட்டிங் அதிகமாக இருக்கும்.

ஆனாலும் காலை 10 மணி முதல் ஒளிபரப்பாகும் இல்லத்தரசிகள் ஆதரவு கொடுத்துக் கொண்டுதான் வருகிறார்கள். அந்த வகையில் ஒரு சீரியல் முடிவுக்கு வரப்போகிறது என்றால் அடுத்த புதிய சீரியல் இறக்கி விடுவார்கள். அந்த வரிசை சன் டிவியில் பூங்கொடி என்ற புதிய சீரியல் தொடங்க இருக்கிறது .வரும் திங்கட்கிழமை முதல் காலை 11:30 மணிக்கு இந்த சீரியல் ஒளிபரப்பாகிறது .

அதாவது ஹீரோ மீது அம்மா போல அதிக பாசத்தை காட்டும் வளர்ப்புத்தாய். ஆனால் அவர் உண்மையில் தன்னுடைய பாசத்தை பொய்யாகவே காட்டுகிறார். அவருடைய முகத்திரையை கிழிப்பதற்கு கதாநாயகி வரப்போகிறார் என்பதுபோல அந்த ப்ரோமோவில் காட்டப்பட்டிருக்கிறது . இந்த கதை ஆனது பாக்யராஜ் ராதா ஆகியோர் நடித்த “எங்க சின்ன ராசா” என்ற படத்தின் கதையை காப்பி அடித்தது போலவே இருப்பதாக விமர்சனம் எழுந்து வருகிறது.
