எங்க வீட்லயே என்னை Kidnap பண்ணிட்டாங்க… அதுக்கு காரணம் இதுதான்… மனம் திறந்த மணிகண்டன்…

By admin on தை 28, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நம்பிக்கை நாயகனாக இருக்கிறார் மணிகண்டன். 2000 காலம் தொடங்கிய காலத்தில் இருந்தே ‘பாய்ஸ்’, ‘காதல் எப்எம்’, ‘கிச்சா வயது16′ போன்ற திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் மணிகண்டன். பிறகு ஒரு சில திரைப்படங்களில் உதவி இயக்குனராகம் பணிபுரிந்து வந்தார்.

   

ஆனால் மணிகண்டனுக்கு திருப்புமுனையாக அமைந்த படம் என்றால் சூர்யா நடித்த ‘ஜெய் பீம்’ திரைப்படம் தான். இந்த திரைப்படத்தில் இவரது நடிப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதைத் தொடர்ந்து இவருக்கு நாயகனாக பல பங்களில் வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படத்தை தொடர்ந்து ‘குட் நைட்’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் மணிகண்டன். இந்த திரைப்படமும் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது.

   

தொடர்ந்து ‘லவ்வர்’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் நடித்த ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி நடை போட்டு தியேட்டர்களில் ஓடிக் கொண்டு இருக்கிறது. எல்லா திரைப்படங்களிலும் மிகவும் எதார்த்தமாக பக்கத்து வீட்டு பையன் போல் இருக்கும் இவரது நடிப்பினால் பார்வையாளர்களிடம் ஈசியாக கனெக்ட் ஆகிவிட்டார். இவரது படம் அடுத்தது எப்போது வரும் என்ற அளவுக்கு மக்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டார் மணிகண்டன். சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட மணிகண்டன் தங்கள் வீட்டில் நடந்த ஒரு வேடிக்கையான நிகழ்வைப் பற்றி கூறியிருக்கிறார்.

 

அவர் கூறியது என்னவென்றால், எனக்கு வந்து கடவுள் பக்தி கிடையாது. கோயிலுக்கு போக மாட்டேன். ஆனா எங்க வீட்ல எல்லாருமே அதீத பக்தியில் இருக்கவங்க. நான் கோவிலுக்கு நேரடியா கூப்ட்டா வரமாட்டேன் அப்படின்னு சொல்லிட்டு ரிஜிஸ்டர் ஆபீஸ் கையெழுத்து போடணும் வா அப்படின்னு என்ன Kidnap பண்ணி தூக்கிட்டு போன மாதிரி கோவிலுக்கு தூக்கிட்டு போனாங்க என்று மனம் திறந்து பேசி இருக்கிறார் மணிகண்டன்.