சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு.. கடற்கரை ஓரத்தில் யோகா செய்த பிரபல நடிகை.. வைரலாகும் வீடியோ..!

By Mahalakshmi on ஜூன் 22, 2024

Spread the love

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நடிகை பூனம் பாஜ்வா பீச் ஓரத்தில் யோகாசனம் செய்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்த பிரபலமானவர்தான் நடிகை பூனம் பஜ்வா. இவர் சேவல் என்ற திரைப்படத்தில் பரத்-க்கு ஜோடியாக நடித்ததன்  மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் தாவணி பாவடையில் வந்து ரசிகர்களை கவர்ந்தவர் பூனம் பஜ்வா.

   

   

தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். பின்னர் சினிமாவில் வாய்ப்பு குறைந்த காரணத்தினால் கிடைக்கின்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். சுந்தர் சி யின் அரண்மனை, ரோமியோ ஜூலியட், முத்தின கத்திரிக்காய் உள்ளிட்ட திரைப்படங்களில் சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்திருக்கின்றார்.

 

இவர் சுனில் ரெட்டி என்பவரை காதலித்து வந்த நிலையில் இருவரும் ஏகப்பட்ட டேட்டிங் செய்து இருக்கின்றார்கள். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. பின்னர் தனது காதலருடன் பிரேக் அப் செய்து கொண்டாரா என்பது தெரியவில்லை. தற்போது வரை சிங்கிளாகவே சுற்றி வருகின்றார் .

சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கக்கூடிய பூனம் வாஜ்வா அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருவார். இளம் ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எதிர வைக்கும் அளவிற்கு இவரின் புகைப்படங்கள் இருக்கும். அதுமட்டுமில்லாமல் யோகாசனம் செய்வது இவருக்கு மிகவும் பிடிக்கும். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இவர் பீச்சோரத்தில் யோகாசனம் செய்திருக்கின்றார். இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து இருக்கின்றார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக் பட்டன்களை தெறிக்க விட்டு வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Poonam Bajwa (@poonambajwa555)