actress pooja hegde

அந்த அற்புதமான உறவை கொண்டாடுங்கள், பாதுகாப்பாக வைத்திருங்கள் – தனது ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்த நடிகை பூஜா ஹெக்டே!

By Elango on மாசி 4, 2026

Spread the love

இயக்குனர் மிஷ்கின் இயக்கிய முகமூடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. பிறகு இந்தி திரையுலகம் பக்கம் சென்ற அவர் மீண்டும் தமிழில் ரீ என்ட்ரி கொடுத்தார். பீஸ்ட் ரெட்ரோ உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் கூலி படத்தில் ஒரு பாட்டுக்கு மட்டும் குத்தாட்டம் போட்டு இருந்தார். மேலும் ஜனநாயகன் படத்திலும் அவர் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இப்போது 35 வயதாகும் பூஜா ஹெக்டே தமிழ் தெலுங்கு இந்தி என பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகை பூஜா ஹெக்டே கூறியதாவது, வாழ்க்கையில் நட்பு என்பது ஒவ்வொருவருக்கும் வரும் அற்புதமான உறவு. அந்த உறவை கொண்டாடுங்கள். பாதுகாத்துக் கொள்ளுங்கள். நட்பில் சந்தேகம் என்றும் இருக்கக் கூடாது. உண்மையான நம்பிக்கை தான் நட்பை தாங்கிப் பிடிக்கும். அப்படிப்பட்ட உண்மையான நட்பு கிடைத்த அத்தனை பேரும் அதிர்ஷ்டசாலிகள் என்று அவர் கூறியிருக்கிறார்.