தமிழக வெற்றிக் கழகத்தினரின் கடும் கண்டனங்களுக்கு மத்தியிலும், பொன்ராஜ் தனது அவதூறு பேச்சில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். தான் பேசியதற்காக யாரிடமும் மன்னிப்பு கேட்கப் போவதில்லை என்றும், விஜய்க்கு பொண்டாட்டியாக இருப்போம் என்று சொல்பவர்களை ‘விபச்சாரி’ என்று சொன்ன வார்த்தையைத் திரும்பப் பெறப் போவதில்லை என்றும் அவர் பிடிவாதமாகக் கூறியுள்ளார். அப்படிச் சொன்னால்தான் அவர்களுக்கு அந்த வலி புரியும் என்பதால் தனது கருத்தில் எந்த மாற்றமும் இல்லை என அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
பெண்களைப் பொதுவெளியில் இவ்வளவு அநாகரிகமாகச் சாடிய பிறகும், அதற்கு நியாயம் கற்பிக்கும் வகையில் பொன்ராஜ் பேசி வருவது தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் மற்றும் மகளிர் அமைப்புகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் நாகரிகம் இன்றிப் பேசும் இத்தகைய நபர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் தற்போது வலுவாக எழுந்து வருகிறது.
ஏற்கனவே தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், “பெண்களை இழிவாகப் பேசினால் சும்மா இருக்க மாட்டோம்” என எச்சரித்துள்ள நிலையில், பொன்ராஜின் இந்தத் தொடர் பிடிவாதம் இரு தரப்பிற்கும் இடையிலான மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நபர் ஒருவர் மிகவும் விஷத்தன்மை கொண்ட ஒரு பாம்பிற்கு தனது…
தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், 2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை உறுதி செய்து…
காட்டின் ராஜா என்று அழைக்கப்படும் சிங்கங்களின் கூட்டமே ஒரு தனி எருமையை வேட்டையாடத் துடிக்கும்போது, எதிர்பாராத திருப்பமாக எருமைக்கூட்டம் ஒன்று…
பிரித்தானியாவில் (UK) சிறார் பாலியல் குற்றவாளிகளைப் பிடிக்கும் ஒரு நடவடிக்கையின் போது, இந்திய ராணுவ அதிகாரி ஒருவரின் மகன் சிக்கியதாக…
பெங்களூருவில் திருட்டு வழக்கு ஒன்றில் கைதான நபர், காவல்துறையினர் சோதனையிடும் போது தன்னிடம் இருந்த லாக்கர் சாவியை அவர்கள் கையில்…
பாஜக நிர்வாகி வினோஜ் பி. செல்வம் தனது எக்ஸ் (X) தளத்தில், இந்துக்களுக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்துள்ள திமுகவுக்கு மாற்றாகத்…