தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே, 12-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக தர்ம முனீஸ்வரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து நடிகர் எஸ்.வி.சேகர் திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசுகையில், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்துப் பெற்றோர்களே கவனமாக இருக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மாணவி ஏன் அந்த இடத்திற்குச் சென்றார் என்பது போன்ற கேள்விகளையும் எழுப்பினார்.
எஸ்.வி.சேகரின் இந்த கருத்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் தரப்பிலேயே தவறு இருப்பது போல அமைந்ததாகக் கூறி சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, பிரபல பின்னணி பாடகி சின்மயி இதற்குத் தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். வீட்டில் கழிப்பறை வசதி இல்லாததால் இயற்கை உபாதை கழிக்கச் செல்லும் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவது இந்தியாவில் தொடர்கதையாக உள்ளது என்றும், எவ்வித அச்சமுமின்றித் தங்களுக்குப் பிடித்த இடத்தில் சிறுநீர் கழிக்கக் கூடிய ஆண்களால் பெண்களின் இந்தத் துயரத்தைப் புரிந்து கொள்ள முடியாது என்றும் அவர் சாடியுள்ளார். மேலும், காவல்துறையினரால் எல்லா இடங்களிலும் பாதுகாப்பு அளிக்க முடியாது எனப் பொறுப்பற்ற முறையில் பேசுவது கண்டிக்கத்தக்கது என்றும் சின்மயி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழக வெற்றி கழகத்தில் (தவெக) முக்கிய சீனியர் தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் தற்போது ஓரங்கட்டப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.…
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அ.ம.மு.க) பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் புதிய அரசு அமையத்…
மனிதநேயம் வெட்கித் தலைகுனிய வேண்டிய ஒரு கொடூரமான உண்மை, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லிடியா கோர்டோ என்பவரின் வாக்குமூலம் மூலம்…
நடைபெற்று முடிந்த 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பெற்று நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும்…
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்கத் தேவையான மெஜாரிட்டியை எட்ட முடியாமல் தவித்து வரும் நிலையில், கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள்…
தமிழக அரசியலில் நிலவும் இழுபறி நிலையைத் தொடர்ந்து, த.வெ.க (TVK) தரப்பு வெளியிட்ட வீடியோ ஒன்று, அக்கட்சியின் அரசியல் எதிர்காலத்திற்கே…