வறுமையில் இருந்த பொன்னம்பலம்.. அன்னைக்கு மட்டும் விஜயகாந்த் அத செய்யலன்னா.. அவரே பகிர்ந்த சுவாரசிய சம்பவம்..!

By Nanthini on கார்த்திகை 23, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் ஒரு வில்லனாக தன்னுடைய திரை பயணத்தை தொடங்கியவர் தான் பொன்னம்பலம். வித்தியாசமான முகபாவனையும் உடலமைப்பும் என்று ஒரு காலத்தில் திரையுலகை கலக்கிக் கொண்டிருந்தவர். ரஜினி, கமல், அஜித், விஜய் என தொடர்ந்து பலரின் திரைப்படங்களில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர். குறிப்பாக நாட்டாமை திரைப்படத்தில் இவருடைய நடிப்பு இன்றுவரை பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. மேலும் தமிழ் சினிமாவின் முக்கியமான வில்லன்களில் ஒருவர் என்ற பெயரையும் அவர் பெற்றிருக்கிறார். சண்டை கலைஞராக இருந்த பொன்னம்பலம் கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள் திரைப்படம் மூலம் முழு நேர நடிகராக அறிமுகமானார்.

என் அண்ணனே உணவில் Slow Poison வெச்சிட்டார்! மனமுடைந்து பேசிய நடிகர்  பொன்னம்பலம் - லங்காசிறி நியூஸ்

   

அதன் பிறகு வெற்றி விழா மற்றும் பெரிய மருது என நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் வில்லனாக நடித்து அசத்தினார். முன்னணி நடிகராக வலம் வந்த பொன்னம்பலத்துக்கு ஒரு கட்டத்துக்கு மேல் பட வாய்ப்புகள் பெரிதாக கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினார். இருந்தாலும் அவரால் பிக் பாஸ் டைட்டில் வின்னர் பட்டத்தை வெல்ல முடியவில்லை. அங்கிருந்து வெளியே வந்ததும் இவருக்கு பெரிதாக பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. இப்படியான சூழலில் அவருக்கு சிறுநீரகத்தில் பிரச்சனை வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அறுவை சிகிச்சை நடந்து உடல் நலம் தேறினார்.

   

Actor Ponnambalam : ஏதோ 1 லட்சம் தருவாருனு நினச்சேன்.. ஆனா.. உயிருக்கு  போராடிய பொன்னம்பலம் - உதவிக்கரம் நீட்டிய "Super Star"!

 

அந்த சமயத்தில் தனக்கு பலரும் உதவி செய்ததாகவும் தனது உறவினர் ஒருவரால் தான் தனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது என பொன்னம்பலம் கூறியிருந்தார். இந்த நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், செந்தூரப்பாண்டி திரைப்படத்தின் கதையைக் கேட்க எஸ்.ஏ.சி ஆபிஸ்க்கு நேரில் சென்று இருந்தேன். அப்போது என்னுடைய கேரக்டர் மற்றும் படத்தின் கதை எவ்வளவு பட்ஜெட் என்று சொல்லிவிட்டு நான் சொல்ற சம்பளத்துக்கு சரி என்றால் படம் பண்ணலாம் என்று அவர் கூறினார். அந்த சமயத்தில் ஒரு வருஷம் நான் வேலை இல்லாமல் இருந்ததுனால ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்தாலே போதும் என்ற நிலைமை தான் எனக்கு இருந்தது. அப்போது எனக்கு கொஞ்சம் கடனும் இருந்ததால் அதை அடைத்தால் போதும் என்ற சூழ்நிலையில் இருந்தேன்.

என் தங்கை திருமணத்திற்கு பணம் இல்லை!. விஜயகாந்த் என்ன செய்தார் தெரியுமா?!..  உருகிய பொன்னம்பலம்… - CineReporters

ஆனால் எஸ் ஏ சந்திரசேகர் எதுவும் பேசக்கூடாது நான் என்ன சொல்றேன்னு அது தான் சம்பளம் என்று சொல்லி, விஜயகாந்த் உன்னை நடிக்க வைக்க சொல்லி இருக்கிறார் என்று சொல்லி செக் ஒன்றையும் என்னிடம் கொடுத்தார். விஜயகாந்த் சொன்னது, படத்தில் மெயின் வில்லன் ஆகிய காரணங்களால் எதுவாக இருந்தாலும் ஓகே தான் என்று நான் வாங்கினேன். உடனே அவர் கவலை இங்கே வைத்து பிரித்து பார்க்காதே தொகையால் மனஸ்தாபம் வரலாம் வீட்டுக்கு சென்ற பிரித்துப் பார் என சொல்லிவிட்டார். நானும் வீட்டுக்கு வந்து நான்கு நாள் கழித்து கவலை பிரித்துப் பார்த்தபோது அதில் ஒரு லட்ச ரூபாய் என எழுதப்பட்டிருந்தது. அது வெறும் அட்வான்ஸ் தான் மொத்த சம்பளம் 2.75 லட்சம் ரூபாய். அந்தத் தொகையால் என்னுடைய கடன் எல்லாத்தையும் அடைத்து விட்டேன். அன்று எஸ்ஏ சந்திரசேகர் மூலமாக விஜயகாந்த் எனக்கு செய்த அந்த பெரிய உதவியை என்றுமே நான் மறக்க மாட்டேன் என பொன்னம்பலம் பேசி உள்ளார்.