தமிழ் சினிமாவில் நடிப்பு என்றாலே அது சிவாஜி கணேசன் மட்டும்தான். பராசக்தி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய இவர் நடிப்புக்கு இலக்கணம் என்றால் அது சிவாஜி தான் என்று சொல்லும் அளவுக்கு தத்ரூபமான நடிப்பு மூலமாக தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் வாழ்ந்து வருகின்றார். அவருக்கு இணையான ஒரு நகைச்சுவை நடிகர் என்றால் அது சந்திரபாபு தான். கடந்த 1947 ஆம் ஆண்டு வெளியான அமராவதி திரைப்படம் மூலமாக சந்திரபாபு தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவருடைய நகைச்சுவை கலந்த நடிப்போடு தன்னுடைய அட்டகாசமான நடன அசைவுகளால் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார். இவரும் சிவாஜி கணேசனும் இணைந்து நடித்த திரைப்படம் தான் சபாஷ் மீனா.

இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. இந்த படத்தைப் பற்றிய ஒரு சுவாரசியமான செய்தி தற்போது இணையத்தில் உலா வருகிறது. அதாவது சபாஷ் மீனா திரைப்படத்தின் இயக்குனர்களான பிஆர் பந்தலு மற்றும் நீலகண்டன் ஆகியோர் முதலில் சிவாஜி கணேசனிடம் இந்த கதையை சொல்லி உள்ளனர். அவர் கதையை கேட்டுவிட்டு கதாநாயகனுக்கு இணையாக நகைச்சுவை நடிகரின் கதாபாத்திரத்தையும் அமைத்து அதில் சந்திரபாபு நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
-lut2r.jpg)
இதனை தொடர்ந்து சந்திரபாபு இயக்குனர்கள் சந்தித்து கதை சொன்ன போது கதையை கேட்டு நடிக்க சம்மதம் சொன்ன அவர் தன்னுடன் யார் நடிக்கிறார் என்று கேட்டுள்ளார். அதற்கு சிவாஜி கணேசன் என்று சொன்னதும் அவர் வாங்கும் சம்பளம் என்ன என்று கேட்டதும் அவர் வாங்கும் சம்பளத்தை விட ஒரு ரூபாய் அதிகம் கொடுத்தால்தான் நான் இந்த திரைப்படத்தில் நடிப்பேன் என்று சந்திரபாபு கண்டிஷன் போட்டுள்ளார். இந்த கண்டிஷனை கேட்டு அதிர்ந்து போன இயக்குனர்கள் சிவாஜி கணேசன் இடம் இதை பற்றி கூறியுள்ளனர்.

இதற்கு இயக்குனர்களிடம் பதில் அளித்த சிவாஜி கணேசன், அவர் சொல்றதை எல்லாம் பெருசா எடுத்துக்காதீங்க, இந்த கதாபாத்திரத்தில் சந்திரபாபு நடித்தால்தான் சரியாக இருக்கும் என்று கூறி அவர் கேட்கும் சம்பளத்தை கொடுத்து விடுங்கள் எனக்கு வேனும்ணா ஒரு ரூபாய் கம்மியா கொடுங்க என்று கூறியுள்ளார். சிவாஜி சொன்னா இந்த வார்த்தையை பார்த்து இயக்குனர்கள் நெகிழ்ந்து போய் நின்றனர். இதனைத் தொடர்ந்து சபாஷ் மீனா திரைப்படத்தில் சிவாஜி கணேசன் மற்றும் சந்திரபாபு ஆகியோர் இணைந்து நடித்த அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
