தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் மக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. அதேசமயம் கடந்த இரண்டு வருடங்களாக பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்க பணமும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் 2025 ஆம் ஆண்டில் பொங்கல் பண்டிகையின் போது ரொக்க பணம் எதுவும் வழங்கப்படவில்லை. நிதி பற்றாக்குறை காரணமாக பொங்கல் பரிசு தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்டது. இப்படியான நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால் 2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையில் ரொக்கப்படும் வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக சமீப காலமாகவே செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் 3000 ரூபாய் ரொக்கம் வழங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பொங்கல் தொகுப்பில் பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு சேர்க்கப்படும். 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி மற்றும் சர்க்கரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேட்டி சேலை நெசவாளர்கள் இடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு ரேஷன் கடைகளுக்கு நகர்வு செய்யப்பட்டுள்ளது. ரொக்கம் மற்றும் கரும்பு கொள்முதல் அறிவிப்பு விரைவில் வெளியாகும். ஜனவரி 10ஆம் தேதிக்கு முன்பு விநியோகம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
