கல்லூரியில் நடந்த கொடூரம்..! தலித் மாணவியை தரக்குறைவாக பேசி, கொடூரமாக தாக்கிய பெண்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

By Soundarya on மார்கழி 31, 2025

Spread the love

தெலங்கானாவில் உள்ள ஒரு அரசு கல்லூரியில், தலித் மாணவி ஒருவருக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், ஒரு பெண் அதிகாரி தலித் சமூகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவரைப் பொதுவெளியில் கொடூரமாக அவமானப்படுத்துவதும், தரக்குறைவாகப் பேசித் தண்டிப்பதும் பதிவாகியுள்ளது.

அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் தரம் மற்றும் அங்கு பயிலும் மாணவர்களின் பாதுகாப்பு புறக்கணிக்கப்படுவதையே இத்தகைய சம்பவங்கள் காட்டுவதாகச் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாகத் தெலங்கானா உயர்க்கல்வித் துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.