மக்களே ரெடியா..? இன்னும் 2 நாட்களில் வீட்டிற்கே வரும் பொங்கல் பரிசு டோக்கன்… தமிழக அரசு அறிவிப்பு..!!

By Soundarya on தை 3, 2026

Spread the love
2026-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள 2 கோடியே 22 லட்சத்து 72 ஆயிரத்து 19 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதற்காக தமிழ்நாடு அரசு ரூ.248 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தத் திட்டத்திற்கான டோக்கன்கள் ‘பொங்கல் பரிசு தொகுப்பு – 2026’ என்ற தலைப்பில் அச்சிடப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்தத் தொகுப்பினைப் பெறுவதற்கான டோக்கன்கள் இன்னும் இரண்டு நாட்களில் பொதுமக்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி மற்றும் நேரத்தில் பொதுமக்கள் சென்று தங்களது பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெற்றுக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.