தமிழகத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கான ஆயத்தப் பணிகளைத் தமிழ்நாடு அரசு முடுக்கிவிட்டுள்ளது. வரும் ஜனவரி 2, 2026-க்குள் பொங்கல் பரிசுக்கான டோக்கன்களை அச்சிட்டுத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று கூட்டுறவுத் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பொங்கல் பரிசாக ₹5,000 வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், தமிழக அரசு ₹3,000 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியுடன் நாளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலமைச்சரின் அறிவிப்பைத் தொடர்ந்து, ரேஷன் கடைகளில் பரிசுத் தொகுப்பு விநியோகம் தொடங்கும் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
