குஷியோ குஷி…. “பொங்கல் பரிசு ரூ.3000 + வேட்டி சேலை”…. ரேஷன் கார்டுதாரர்களுக்கு அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!

By Nanthini on புரட்டாதி 13, 2026

Spread the love

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 ரொக்கப் பரிசு வழங்குவது குறித்து முதலமைச்சர் விஜய் ஆய்வு செய்து விரைவில் நற்செய்தி அறிவிப்பார் என்று அமைச்சர் வெங்கட்ரமணன் தெரிவித்துள்ளார். கொடைக்கானலில் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், நடப்பாண்டைப் போலவே எதிர்வரும் பொங்கல் பண்டிகைக்கும் ₹3,000 ரொக்கப் பணம் வழங்கப்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அமைச்சர், மக்களுக்குத் தேவையான அனைத்துச் சலுகைகளையும் வழங்குவதில் அரசு உறுதியோடு இருப்பதாகத் தெரிவித்தார்.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் வேட்டி, சேலை மற்றும் பொங்கல் தொகுப்புப் பொருட்களுடன் ரொக்கப் பணமும் சேர்த்து வழங்கப்படுமா என்பது குறித்து அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. அனைத்துத் தரப்பு மக்களின் எதிர்பார்ப்புகளையும் கணக்கில் கொண்டு, பொருளியல் ரீதியான அம்சங்களை ஆய்வு செய்த பிறகு முதலமைச்சர் விஜய் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு உத்தரவிடுவார் என்றும் அமைச்சர் வெங்கட்ரமணன் உறுதியளித்துள்ளார்.