2026 பொங்கலை முன்னிட்டு வழங்கப்படும் இந்த பரிசுத் தொகுப்பில் ரொக்கப் பணம் மற்றும் மளிகைப் பொருட்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், புதிய கார்டு தாரர்கள் தங்கள் கார்டுகள் எப்போது செயல்பாட்டுக்கு வரும் என ஆவலோடு காத்திருக்கின்றனர். இந்நிலையில் தமிழக அரசு பொங்கல் பரிசுத் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் தேதியன்று, புதிய கார்டுகள் முழுமையாகச் செயல்பாட்டு நிலையில் இருந்தால் மட்டுமே அந்தப் பயனாளிக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும்.
விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டு, கார்டு எண்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தாலும், அவை கணினி முறையில் (PDS System) ஆக்டிவ் ஆக வேண்டியது அவசியமாகும். பரிசு அறிவிப்பு வெளியாவதற்குள் இந்த நடைமுறைகள் முடிவடைந்தால் மட்டுமே இவர்களுக்குப் பொங்கல் தொகுப்பு கிடைக்கும்.
