போடு ரகிட ரகிட…! பொங்கல் பரிசுத்தொகை ரூ.2,500..? சீக்ரெட் சொன்ன தமிழக அமைச்சர்…!!

By Soundarya on மார்கழி 24, 2025

Spread the love
வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பரிசுத்தொகுப்பு மற்றும் ரொக்கப் பணம் குறித்துப் பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். கடந்த ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும் பொங்கல் பரிசாக ரூ.2,500 ரொக்கப் பணம் வழங்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, “பொங்கல் பரிசுத்தொகை குறித்து இப்போது எதையும் உறுதியாகச் சொல்ல முடியாது. அது ரகசியமாகவே இருக்கும்; திடீரென அறிவிக்கப்படும்” எனக் கூறி சஸ்பென்ஸை ஏற்படுத்தியுள்ளார்.
அமைச்சரின் இந்தக் கருத்து, பரிசுத்தொகை குறித்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.