Categories: சினிமா

MGR – சிவாஜி இடையே நடந்த மோதல்.. வில்லனாக வந்தது யார் தெரியுமா..? சிவாஜியே சொன்ன ஓபன் ஸ்டேட்மென்ட்..

Spread the love

தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் சிவாஜி, ரஜினி கமல், விஜய் அஜீத் என ஒவ்வொரு தலைமுறையிலும் இரண்டு நடிகர்கள் போட்டியாளர்களாக இருப்பது தொடர்ந்துக்கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் இந்த ஜோடிகளை பொருத்த வரை திரையில்தான் மோதிக்கொள்கிறார்களே தவிர, நேரில் ஒருமுறை கூட அவ்வாறு நடந்தது இல்லை. அதிலும் ரஜினி கமல் இருவரும் போட்டியாளர்களாக இருந்தாலும் சகோதர பாசத்தை வெளி்பபடுத்துகின்றனர். விஜய் அஜீத் இருவரும் நல்ல நண்பர்களாகதான் இருந்து வருகி்னறனர்.

ஆனால் எம்ஜிஆர் சிவாஜி அந்த காலகட்டத்தில் கடும் போட்டியாளர்களாக திரைப்படங்களில் இருந்தனர். ஆனால் உண்மையில் அவர்கள் இருவருமே மிக நெருக்கமான நண்பர்கள். இருவரும் நடிக்க துவங்கிய காலத்தில் இருந்து பெரிய நட்சத்திரங்களாக மாறிய பின்பும் அவர்களுக்குள் அந்த நட்பு எப்போதுமே உறுதியாகவே இருந்தது.

எம்ஜிஆர் சிவாஜி நடித்த படங்கள் தியேட்டர்களுக்குள் மோதிக் கொள்ளும். தியேட்டர்களுக்கு வெளியே எம்ஜிஆர் சிவாஜி ரசிகர்கள் மோதிக் கொள்வார்கள். எம்ஜிஆர் பட போஸ்டர்களை சிவாஜி ரசிகர்கள் கிழித்து எறிவதும், சிவாஜி பட போஸ்டர்கள் மீது எம்ஜிஆர் ரசிகர்கள் சேறை வாரி இறைப்பதும் அடிக்கடி நடந்திருக்கிறது.

ஆனால் எம்ஜிஆர் சிவாஜியும் நேரடியாக மோதிக்கொள்ளவே மாட்டார்கள். அப்படிப்பட்ட எம்ஜிஆரையும் சிவாஜியையும் மோதிக் கொள்ள செய்யும் ஒரு நபர் அவர்கள் இருவருக்கும் நடுவில் வந்தார். டாக்டர் பட்டம் பெற்ற எம்ஜிஆருக்கு நடந்த பாராட்டு விழாவில், இதுகுறித்து நடிகர் சிவாஜியே ஒப்புதல் வாக்குமூலம் தந்திருக்கிறார்.

நாங்கள் ஒரே இடத்தில் வாழ்ந்தவர்கள். ஒரே தாயின் கையில் உணவு உண்டவர்கள். அப்போது யாராலும் எங்களை பிரிக்க முடியவில்லை. ஆனால் இந்த அரசியல் எங்களை பிரித்து விட்டது. அடிவயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டது போன்ற உணர்வை, அரசியல் எங்களுக்குள் உருவாக்கி விட்டது. இதுதான் சிவாஜி கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம் என்பது குறிப்பிடத்தக்கது.

admin

Recent Posts

“டெல்லியை உலுக்கும் மெகா புரட்சி.. ‘காக்கரோச் ஜனதா கட்சி’ போராட்டத்தில் குதித்த AISA மற்றும் SFI மாணவ இயக்கங்கள்.. மத்திய அரசுக்கு புதிய நெருக்கடி”..!

நீட் (NEET-UG 2026) வினாத்தாள் கசிவு மற்றும் சிபிஎஸ்இ (CBSE) தேர்வு குளறுபடிகளுக்கு எதிராக, நாட்டின் கல்வித்துறையையும் லட்சக்கணக்கான மாணவர்களின்…

5 minutes ago

“சச்சினின் 36 ஆண்டுகால அசுர சாதனை அவுட்.. இந்திய கிரிக்கெட்டை ஆள வந்த 15 வயது சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி.. பிசிசிஐ-யின் அன்லிமிடெட் அதிரடி பிளான்..!!

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு மாபெரும் வரலாற்றுச் சாதனை இன்று நிகழ்த்தப்பட்டுள்ளது. அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து…

16 minutes ago

“ரயில்வே சாப்பாட்டுல இனிமேல் இந்த தப்பு நடக்காது.. ஏஐ தொழில்நுட்பத்தின் மாஸ் என்ட்ரி.. ஐஆர்சிடிசி-யின் அதிரடி ஆக்ஷன்”..!!

ரயில் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் சுகாதாரத்தை 100 சதவீதம் உறுதி செய்யும் நோக்கில், இந்திய ரயில்வே உணவு…

30 minutes ago

முதியவர்களுக்கே இந்த நிலையா..? வீட்டிற்குள் புகுந்து 60 வயது.. மூதாட்டிக்கு பாலியல் துன்புறுத்தல்.. மீண்டும் அதிகாலையில் வந்து அத்துமீறல்… கள்ளக்குறிச்சியில் பரபரப்பு…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் வடபொண்பரப்பி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், வீட்டில் தனியாக உறங்கிக் கொண்டிருந்த 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவரிடம்…

37 minutes ago

“அன்று விஜய்யை 3 மணி நேரம் அலையவிட்ட அமைச்சர்!.. இன்று தவெக வாசலில் மணிக்கணக்கில் காத்திருந்த கொடூரம்.. காலம் கொடுத்த மரண அடி”..!!

தமிழக அரசியலில் இன்று ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அதிரடித் திருப்புமுனை நிகழ்ந்துள்ளது. ஒருகாலத்தில் தமிழகத்தின் அசுர பலம் வாய்ந்த…

37 minutes ago

“டிகிரி முடிச்சிருக்கீங்களா?.. 7,150 காலிப்பணியிடங்கள்.. கடைசி தேதி நீட்டிப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க.. SBI அதிரடி அறிவிப்பு”..!!

வங்கித் துறையில் பணிபுரிய ஆர்வமுள்ள நம்ம ஊர் இளைஞர்களுக்கு ஒரு புதிய வேலைவாய்ப்புச் செய்தியை இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான…

46 minutes ago