கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு சென்னை மாமல்லபுரத்தில் இன்று தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் விஜய் தலைமை தாங்கினார். இந்த பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது அதுமட்டுமல்லாமல் முதல்வர் வேட்பாளர் விஜய் தான் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதேசமயம் 2026 தேர்தலில் TVK – DMK இடையே தான் போட்டியென விஜய் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
மேலும் தொடர்ந்து பொதுக் கூட்டத்தில் பேசிய விஜய், கரூர் சம்பவத்தில் உண்மை நிலையை தெளிவுபடுத்த வேண்டும் எனக் கூறி சட்ட ரீதியாகவும் சாமர்த்தியமாகவும் பேசுவதாக நினைத்துக்கொண்டு சட்டப்பேரவையில் முதலமைச்சர் உரையாற்றினார். அப்போது அவர் ஒரு வடிகட்டின பொய்யை கூறியுள்ளார். இதை நான் சொல்லவில்லை உச்ச நீதிமன்றம் சொல்லி இருக்கிறது என்று விஜய் கடுமையாக விமர்சித்துள்ளார்.
