2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஆளும் திமுகவை எதிர்த்து வெற்றி பெறுவதற்காக அதிமுக போராடி வருகிறது. இதற்காக கடுமையான முயற்சிகளை எடுத்து வருகிறது. அதிமுகவிலிருந்து பலர் பிரிந்து சென்றாலும், ஜெயலலிதா ஆட்சிக்கு பின் பல முறை தோல்வியை சந்தித்தாலும் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக நின்று முயற்சி செய்து வருகிறார். இந்நிலையில் இரட்டை இலை என்ற மிகப்பெரிய அஸ்திரம் அதிமுகவிடம் இருப்பதால், நம்பிக்கையுடன் களத்தில் நின்றால் எளிதில் நினைத்ததை சாதிக்க முடியும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
2021 ஆம் தேர்தலில் 10 ஆண்டுகள் ஆட்சியின் எதிர்ப்பு மனநிலை, உட்கட்சி பிரச்னைகள் இருந்த போதும் 65 இடங்களுக்கு மேல் அதிமுக வெற்றியை கைப்பற்றியது. கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைப்பதை அதிமுக சரியாக செய்தாலே சவால்களை முறியடிக்க முடியும் எஎன்றும் கூறுகிறார்கள்.
