இன்று மாலை முதல் “தளபதி கச்சேரி…” ஆரம்பம்…! ஜனநாயகன் பர்ஸ்ட் சிங்கிள் பற்றிய அப்டேட்… குஷியில் ரசிகர்கள்…!!

By Devi Ramu on கார்த்திகை 8, 2025

Spread the love

எச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து முடித்துள்ள திரைப்படம் ‘ஜன நாயகன்’. இதில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்கல் வெளியீட்டை முன்னிட்டு 2026 ஜனவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் இன்று (நவம்பர் 8) வெளியாகும் என படக்குழு போஸ்டர் வழங்கி அறிவித்திருந்தது. ‘தளபதி கச்சேரி’ என்று தொடங்கும் அந்தப் பாடல் இன்று மாலை 6:03-க்கு வெளியாகும் என புதிய அப்டேட் வந்துள்ளது. இந்தப் பாடல் விஜய்யின் குரலில் இருக்கும் என்று கூறப்படுகிறது.