“ஹேய் மேடம்… என் புள்ளையை எங்கே ஒளிச்சு வச்சிருக்கீங்க?… பெண் போலீஸின் குறும்பு… கையும் களவுமாகப் பிடித்து கியூட் ஃபைட் போட்ட தாய் நாய்… மனதை நெகிழவைத்த வீடியோ…!

By Swetha on ஆவணி 22, 2026

Spread the love

கோரக்பூர் இரயில் நிலையத்தில் நடந்த இந்தச் சம்பவம், தாய்ப்பாசத்திற்கு மனிதர் என்றும் விலங்கு என்றும் எந்தப் பாகுபாடும் இல்லை என்பதை மிக அழகாக உணர்த்துகிறது. அங்கிருந்த ஒரு பெண் காவல் அதிகாரி, ஒரு சிறிய நாய்க்குட்டியை விளையாட்டாக மறைத்து வைத்தார். சிறிது நேரத்திலேயே தனது குட்டியைக் காணாத தாய் நாய், பதற்றத்துடன் அங்குமிங்குமாகத் தேடி அலைந்து அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தது.

தன் குட்டி அந்த பெண் காவல் அதிகாரியிடம் தான் இருக்கிறது என்பதை உள்ளுணர்வால் உணர்ந்தது போல், அந்தத் தாய் நாய் அவரைச் சுற்றிச் சுற்றி வந்தது. தன் மகனை அல்லது மகளைத் தேடும் ஒரு தாயின் தவிப்பும் ஏக்கமும் அந்த விலங்கின் ஒவ்வொரு அசைவிலும் வெளிப்படையாகத் தெரிந்தது. அந்த இடத்தை விட்டு நகரமால், காவல் அதிகாரியையே நம்பி அது சுற்றிய விதம் அங்கிருந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

   

https://twitter.com/HajiNizamuddin3/status/2091066655262814455/video/1

   

இறுதியில், அந்தப் பெண் காவல் அதிகாரி மறைத்து வைத்திருந்த நாய்க்குட்டியை வெளியே எடுத்து தாயிடம் ஒப்படைத்தார். தன் குட்டியைக் கண்டதும் அந்தத் தாய் நாயின் பயமும் கவலையும் நொடியில் மறைந்து, பெரும் நிம்மதி அடைந்தது. பெற்ற பிள்ளை மனிதராக இருந்தாலும் சரி, ஐந்தறிவுள்ள விலங்காக இருந்தாலும் சரி, ஒரு தாயின் அன்பும் பாசமும் என்றென்றும் ஒன்றே என்பதற்கு இந்நிகழ்வு ஒரு சிறந்த சான்றாகும்.