ஏஐ-யின் ஆதிக்கம் பெருகி வரும் நிலையில் வீடியோக்கள், இமோஜிகள் டிரெண்டிங்க் ஆகி வருகிறது. அந்த வகையில் google ஜெமினியின் நேனோ பனானா புகைப்படங்கள் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது. அதிலும் பெண்கள் சேலை அணிந்திருக்கும் புகைப்படங்க,ள் 3d புகைப்படங்கள் ஆகியவை இன்றைய தலைமுறையினர் இடையே அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது .குறிப்பாக பெண்கள் பலரும் தங்களுடைய படங்களை பதிவேற்றம் செய்து சேலை கட்டி இருப்பது போல மாற்றி தங்கள் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்கள். பொழுதுபோக்காக பலரும் இது செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள் .
ஆனால் இது ஒரு பக்கம் பொழுதுபோக்காக இருந்தாலும் மறுபுறம் இந்த புகைப்படங்களை தவறாக பயன்படுத்தலாம் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். இதுகுறித்து பஞ்சாப் காவல்துறை விடுத்துள்ள எச்சரிக்கையில், “கூகுள் ஜெமினி பெயரில் வைரலாகும் நேனோ பனானா சேலை டிரெண்ட்டிங் தொடர்பாக தனிப்பட்ட தகவல்கள் புகைப்படங்கள், போலி இணையதளங்கள் அல்லது ஆப்களை பதிவேற்றம் செய்ய வேண்டாம். இந்த புகைப்படங்கள் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது .அதுமட்டும் இல்லாமல் ஒரே கிளிக்கில் உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணம் சைபர் திருட்டு கும்பல்களின் கைக்கு போகலாம். “உங்கள் தகவல் உங்கள் பொறுப்பு” என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…