BREKING: வாக்குச்சாவடியில் போலீசுக்கு கத்திக்குத்து… உச்சக்கட்ட பரபரப்பு…!!!

By Muthu Mani on சித்திரை 23, 2026

Spread the love

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே உள்ள பொறையார் ஜமாலியா நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடியில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலர் விக்னேஷ் என்பவரை முன்னாள் ராணுவ வீரர் பிரபாகரன் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குத்தாலம் காவல் நிலையத்தைச் சேர்ந்த விக்னேஷ் சீருடையில் பணியில் இருந்தபோது, அங்கு வாக்களிக்க வந்த பிரபாகரன் திடீரென தனக்கு ‘போலீஸ் சீருடையைக் கண்டாலே பிடிக்காது’ என்று கூறி மறைத்து வைத்திருந்த கத்தியால் காவலரின் கழுத்து மற்றும் தோள்பட்டை பகுதியில் சரமாரியாகக் குத்தியுள்ளார். இரத்த வெள்ளத்தில் சரிந்த காவலர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கிருந்தவர்கள் பிரபாகரனைப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்; தேர்தல் நேரத்தில் நடந்த இந்த வன்முறைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.