டியூட்டியில் இருந்த எஸ்.ஐ…! வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்த மனைவி… பதறிப் போய் ஓடி வந்த கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பகீர் பின்னணி…!!

By Devi Ramu on மார்கழி 13, 2025

Spread the love

விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த அருண் (28), சாத்தூர் நகர் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராகப் (எஸ்.ஐ.) பணிபுரிகிறார். இவர் சிவகங்கை காளையார்கோவிலைச் சேர்ந்த இளவரசியை (25) மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

நேற்று ஆளுநர் நிகழ்ச்சிக்குப் பாதுகாப்புப் பணியில் அருண் இருந்தபோது, தன் மனைவி இளவரசி தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில், “குழந்தையை நன்றாகப் பார்த்துக்கொள்ளவும், நன்றாகப் படிக்க வைக்கவும். நான் செல்கிறேன்” என்று பதிவிட்டிருப்பதைப் பார்த்து பதற்றமடைந்தார்.

   

உடனடியாக வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீடு உட்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்றபோது, இளவரசி சேலையால் தூக்கிட்டுத் தொங்கிய நிலையில் காணப்பட்டார். காவல்துறையினர் உதவியுடன் உடலைக் கைப்பற்றி விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. திருமணமாகி 3 வருடங்களே ஆனதால், இதுகுறித்து ஆர்டிஓ விசாரணை நடைபெறுகிறது.

   

இந்நிலையில், இளவரசியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும், எஸ்.ஐ. அருணைக் கைது செய்ய வேண்டும் என்றும் கோரி, இளவரசியின் உறவினர்கள் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்துப் பாதிக்கப்பட்ட நிலையில், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானம் ஆகாததால், மறியலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.