அடேய் என்னடா சொல்ற… “போலீசார் பறிமுதல் செய்த 14 லட்சம்”… அதிர்ச்சியில் உறைந்த முதலாளி…. கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட்…!

Spread the love

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தன்வீர் அகமது என்பவர் சென்னை பெரியமேட்டில் தொழில் செய்து வருகிறார். இவரது உதவியாளரான 25 வயது முகமது தன்ஜீர் என்பவர், கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகளிடம் வசூலான ரூ.14 லட்சம் பணத்தைப் பெற்றுக்கொண்டு ஆட்டோவில் திரும்பியுள்ளார். அப்போது, நெற்குன்றம் பகுதியில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு தனது பணத்தையும் செல்போனையும் பறித்துச் சென்றதாகவும், காவல் நிலையம் வந்து பெற்றுக்கொள்ளுமாறு கூறியதாகவும் தனது முதலாளியிடம் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

பொதுவாக தேர்தல் காலங்களில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் ரூ.50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரொக்கப் பணத்தைப் போலீசார் பறிமுதல் செய்வது வழக்கம். ஆனால், தற்போது தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இல்லாத சூழலில் இச்சம்பவம் நடந்ததால் சந்தேகமடைந்த தன்வீர் அகமது, கோயம்பேடு காவல் நிலையத்தில் விசாரித்துள்ளார். அங்கு அதுபோன்ற சோதனைகள் ஏதும் நடக்கவில்லை என்பது தெரியவரவே, அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர்.

சம்பவம் நடந்ததாகக் கூறப்பட்ட இடத்தில் உள்ள சிசிடிவி (CCTV) கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது, அங்கு போக்குவரத்து போலீசார் யாரும் வாகன சோதனையில் ஈடுபடவில்லை என்பது உறுதியானது. இதனால் சந்தேகத்தின் வளையம் உதவியாளர் முகமது தன்ஜீர் பக்கம் திரும்பியது. அவரிடம் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளார். இறுதியில், கடன் சுமை காரணமாகத் தான் இந்தப் பணத்தைத் திருடி நாடகமாடியதை அவர் ஒப்புக்கொண்டார்.

தன்ஜீர் அந்த 14 லட்ச ரூபாயைப் பொன்னேரியில் உள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து முழுப் பணத்தையும் மீட்டனர். தேர்தல் நடைமுறைகளைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, போலீஸ் பெயரைக் கெடுக்கும் வகையில் நாடகமாடிய உதவியாளரின் இந்தச் செயல் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உதவியாளராக இருந்தாலும் பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு பாடமாக அமைந்துள்ளது.

Nanthini

Recent Posts

அய்யய்யோ… ரீல்ஸ் மோகத்தால் நேர்ந்த கொடூரம்… கடற்கரையில் கார் சாகசம்… வாகனத்தின் அடியில் சிக்கி.. 14 வயது சிறுவன் பரிதாப பலி… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…

5 minutes ago

ஐயோ… காப்பாத்துங்க… நடுரோட்டில் கதறிய இளம்பெண்… தேனீக்கள் தாக்கியதில் சிதறி ஓடிய கூட்டம்… இணையத்தில் வைரல் வீடியோ…!

பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

29 minutes ago

ஐயோ… காப்பாத்துங்க… நொடிப் பொழுதில் நசுங்கிய ஆம்னி… மரணத்தின் பிடியில் ஓட்டுநர்… கொட்டாரக்கரையில் அதிர்ச்சி விபத்து…!!

கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…

52 minutes ago

பஸ் ஸ்டாண்ட் வரைதானே… ஏறு… நடுரோட்டில் பெல்ட்டால் வெறித்தனமான தாக்குதல்… ரூ 7.45 லட்சத்துடன் மாயமான கும்பல்… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ…!

சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…

1 மணத்தியாலம் ago

ஐயோ… பகல் நேரத்தில் நடுரோட்டில் ரத்த வெள்ளம்… கர்ப்பிணி யூடியூபரின் கணவர் கொடூரக் கொலை… நெஞ்சை நடுங்கவைக்கும் சம்பவம்…!!

தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…

1 மணத்தியாலம் ago