மேற்கு டெல்லியின் கியாலா பகுதியில் அமைந்துள்ள ஜிஜிஎஸ் அரசு மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதியன்று ஒரு அதிர்ச்சியூட்டும் கடத்தல் சம்பவம் அரங்கேறியது. அங்கு தனது தாயுடன் வந்திருந்த மூன்று வயது ஆண் குழந்தை, தாய் மருந்து வாங்கச் சென்ற சிறு இடைவெளியில், மர்மப் பெண் ஒருவரால் எதிர்பாராத விதமாகத் தூக்கிச் செல்லப்பட்டான். குழந்தையைக் காணாமல் பதறிய தாய், உடனடியாகக் காவல் துறையினரிடம் புகார் அளித்தார்.
இந்த வழக்கைக் கையில் எடுத்த டெல்லி காவல்துறையினர், கடத்தலில் ஈடுபட்ட பெண்ணைத் தீவிரமாகத் தேடி வந்தனர். எவ்விதத் தடயமும் இன்றித் தப்ப முயன்ற அந்தப் பெண்ணை, சிசிடிவி மற்றும் தொழில்நுட்ப உதவிகளுடன் சுமார் ஆயிரம் கிலோமீட்டர்களுக்கும் மேல் காவல் துறையினர் விடாமல் பின்தொடர்ந்தனர். இறுதியில், பீகார் மாநிலம் முங்கர் மாவட்டத்தில் வைத்து அந்தப் பெண்ணைக் கைது செய்த போலீசார், சிறுவனையும் எவ்வித ஆபத்துமின்றிப் பத்திரமாக மீட்டனர்.
