ஐயோ கடவுளே… செல்போன் மோகத்தால் பறிபோன உயிர்… 8 வயது சிறுவன் பலி… பாந்த்ரா ஹிட் அண்ட் ரன் வழக்கில்… மேகா ராவல் நீதிமன்றக் காவலில் அடைப்பு… மும்பையில் பரபரப்பு…!

By Swetha on புரட்டாதி 1, 2026

Spread the love

மும்பை பாந்த்ரா பகுதியில் சொகுசு கார் மோதி 8 வயது சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில், கைது செய்யப்பட்ட ஊட்டச்சத்து நிபுணர் மேகா ராவல் (45) என்பவரை நீதிமன்றம் ஒரு நாள் காவல் முடிந்து நீதிமன்றக் காவலில் வைத்தது. இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவத்தன்று மேகா ராவல் ஓட்டிச் சென்ற வாகனம் சாலை கடந்த சிறுவன் மீது மோதியதில், சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். வாகனம் ஓட்டும் போது அவர் செல்பேசியில் பேசியவாறு கவனக்குறைவாக இருந்ததே இந்த விபத்திற்குக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

   

இதனைத் தொடர்ந்து பாரதிய நியாய சகிதா பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், விபத்துக்கான தடையங்கள் மற்றும் சாட்சிகளைச் சேகரிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். சிறுவனின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.