இன்னும் சற்று நேரத்தில் சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்ய உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. சினிமா தயாரிப்பாளர் புருஷோத்தமனை தாக்கியதாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கடந்த மாதம் சவுக்கு சங்கருக்கு ஆதம்பாக்கம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். அதற்கு அவரும் பதிலளித்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக இன்று அதிகாலை அவரை கைது செய்ய போலீசார் வீட்டுக்கு விரைந்துள்ளனர்.
