தவெக ஆட்சி கவிழ்கிறது?… தமிழகத்தில் காலையிலேயே பெரும் பதற்றம்… நீதிமன்றம் எடுத்த திடீர் திருப்ப முடிவு…!

By Nanthini on ஆடி 5, 2026

Spread the love

தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாகக் கூறப்படும் வழக்கு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் சூழலில், கரூர் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த வழக்கில் முக்கிய நபராகக் கருதப்படும் செந்தில் பாலாஜிக்கு நாளை நேரில் ஆஜராகுமாறு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ள நிலையில், அவர் ஆஜராகத் தவறும்பட்சத்தில் கைது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில், இவ்வழக்கு தொடர்பாக ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள 8 பேரில் 3 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை நீதிமன்றம் வரும் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது, அரசியல் வட்டாரத்தில் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.