“முகத்தில் எலும்பு முறிவு… ஒரு கண் பார்வையை இழந்த பெண்…” காவல் அதிகாரியின் கொடூர செயல்… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

Spread the love

அமெரிக்காவில் குடிபோதையில் கைது செய்யப்பட்ட பெண் ஒருவரைக் காவல் அதிகாரி ஒருவர் சிமென்ட் பெஞ்சில் பலமாக மோதியதில், அப்பெண் முகத்தில் பலத்த எலும்பு முறிவுகளுடன் ஒரு கண் பார்வையை முற்றிலும் இழந்த கோரச் சம்பவம் சமூக வலைதளங்களில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் 47 வயதான கசாண்ட்ரா கோல்ட்ஸ்டீன் என்பவர் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாகக் கூறி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அப்போது மைக்கேல் ஹார்ட் என்ற 19 ஆண்டு கால அனுபவமிக்க காவல் அதிகாரி, அப்பெண்ணைக் கொடூரமாகத் தூக்கிச் சிமென்ட் பெஞ்சின் மீது மோதியுள்ளார். இந்த கோரத் தாக்குதலில் கசாண்ட்ராவின் முகத்தில் பல எலும்பு முறிவுகள் ஏற்பட்டதுடன், பல பற்கள் உடைந்து ஒரு கண் பார்வையும் நிரந்தரமாகப் பறிபோனது. மேலும் அவரது முகத்தில் டைட்டானியம் தகடு ஒட்டும் அளவுக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.

இச்சம்பவம் குறித்துத் தொடரப்பட்ட வழக்கில், தவறிழைத்த அதிகாரி மைக்கேல் ஹார்ட் பணிநீக்கம் செய்யப்பட்டு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார். மேலும், பாதிக்கப்பட்ட கசாண்ட்ராவுக்கு காவல் துறை தரப்பிலிருந்து 8,10,000 அமெரிக்க டாலர்கள் இழப்பீடாக வழங்கப்பட்டது. இருப்பினும், ஒரு பெண்ணின் வாழ்க்கையையே மாற்றியமைத்த இந்த வன்செயலுக்கு வெறும் 2 ஆண்டுகள் மட்டுமே சிறைத் தண்டனையா என உலகெங்கிலும் உள்ள நெட்டிசன்கள் தங்களது கடும் கண்டனங்களையும் ஆத்திரத்தையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

பெற்றோர்களே உஷார்!… இதுதான் காரணமா?… அங்கே நடந்தது என்ன?… மாணவர்களுக்கு நேர்ந்த பயங்கரம்… கண்ணீர் விட்டு கதறிய பெற்றோர்…!!

அஹுவாகாட்லான் பகுதியில் உள்ள பொது இடத்தில் உடல்நலம் குன்றிய நிலையில் காணப்பட்ட பள்ளி மாணவர்கள் மூவரை உள்ளூர் பாதுகாப்புப் படையினர்…

21 minutes ago

‘ஆபரேஷன் டைகர்’… ஊருக்குள் பட்டப்பகலில் 4 புலிகள் உலா… விவசாயி மீது வெறித்தனமான தாக்குதல்… நடுக்கத்தில் கிராம மக்கள்… வைரலாகும் ட்ரோன் காட்சிகள்…!!

கர்நாடக மாநிலம் மைசூரு அருகே உள்ள அகலா கிராமப் பகுதியில், ஒரே இடத்தில் நான்கு புலிகள் நடமாடுவது அங்கு பறக்கவிடப்பட்ட…

31 minutes ago

பழைய பகையா?… கடையில் நடந்தது என்ன?… நடுரோட்டில் பட்டப்பகல் வெறிச்செயல்… 7 பேர் கொண்ட கும்பல் செய்த அதிர்ச்சி காரியம்…!!

குஜராத் மாநிலம் கேடா மாவட்டத்திற்குட்பட்ட மஹமதாபாத் - பிதாய் வழித்தடத்தில் இயங்கி வரும் 'கோடல் ஜெனரல் ஹார்டுவேர் அண்ட் பஞ்சர்…

37 minutes ago

ரூ.100 கோடி மோசடி வழக்கில் பகீர் திருப்பம்…. அரசகுமார் மீது முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் அவுட் ஆஃப் தி பாக்ஸ் அட்டாக்….. வெடிக்கும் வாதங்கள்…!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில், திமுக…

38 minutes ago

“வாயில் கற்கள், மண்ணை திணித்து…” காட்டுப்பாதையில் வந்த காவல் அதிகாரி… கொன்று புதைத்த தந்தை-மகன்… பகீர் பின்னணி…!!!

ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் நிலத்தகராறு காரணமாகச் சிறப்பு காவல் அதிகாரி ஒருவர் அவரது சொந்த உறவினர்களாலேயே உயிருடன் புதைத்துக்…

43 minutes ago

திக்.. திக்..! போலிஸ் அலட்சியமா?… . குடும்ப பகையா? திட்டமிட்ட சதியா?… முன்பே எச்சரித்தும் பறிபோன 2 உயிர்கள்… பகீர் பின்னணி…!!

ஹைதராபாத்தில் தீர்க்கப்படாத குடும்பப் பகை காரணமாக இரு பெண்கள் தங்கள் சொந்த உறவினராலேயே கொடூரமாகக் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம்…

45 minutes ago