தமிழக முதல்வர் தவெக தலைவர் விஜய்யின் சுதந்திர தின விழா கான்வாய் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் சீனிவாசன் (54) சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழா நாளன்று பாதுகாப்புப் பணியின் போது எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த கார் விபத்தில் பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
முன்னதாக, அதே நாளில் பணியின் போது மயக்கமடைந்து விழுந்த காவலர் தர்மராஜ் என்பவர் உயிரிழந்த அதிர்ச்சி விலகுவதற்குள், தற்போது மற்றொரு அதிகாரியும் பலியாகியிருப்பது காவல்துறை வட்டாரத்தில் மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் தன்னுயிரை ஈந்த உதவி ஆய்வாளர் சீனிவாசனின் மறைவுக்கு அவரது சக காவலர்களும், அதிகாரிகளும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
