தூத்துக்குடியில் நள்ளிரவில் பயங்கரம்..! விசாரணைக்குச் சென்ற எஸ்.ஐ மற்றும் காவலருக்கு அரிவாள் வெட்டு… சிறுவன் உட்பட 3 பேர் கைது..!!

By Soundarya on ஆனி 18, 2026

Spread the love

தூத்துக்குடி நேரு காலனி பகுதியில் தொழிலாளி ஒருவரின் வீட்டின் மீது மர்ம நபர்கள் மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலைத் தீயிட்டு வீசிவிட்டுத் தப்பியோடினர். இதுகுறித்து விசாரணை நடத்தச் சென்ற வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாணிக்கராஜ் மற்றும் காவலர் மீனாட்சி ஆகியோரை, அங்கு மறைந்திருந்த கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியோட முயன்றது.

காயமடைந்த நிலையிலும் துரத்திச் சென்ற காவலர்கள், கார்த்திக், தினேஷ் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய மூவரையும் சுற்றி வளைத்துக் கைது செய்தனர். மேலும், விக்னேஷ் என்பவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. தப்பியோட முயன்றபோது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் குற்றவாளிகள் மூவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

   

காயமடைந்த காவலர்கள் மற்றும் குற்றவாளிகள் அனைவரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மண்ணெண்ணெய் குண்டு வீச்சு மற்றும் போலீஸ் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாகப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.