வாலிபர் படுகொலை வழக்கு…! ஆர்எஸ்எஸ் தலைவர் கல்லட்கா பிரபாகர் பட்டுக்கு போலீஸ் நோட்டீஸ்… விசாரணைக்கு ஆஜராவதில் புதிய திருப்பம்…!!!

Spread the love

கர்நாடக மாநிலம் தக்ஷிண கன்னடா மாவட்டம் பந்த்வால் தாலுகாவில் கடந்த 2025 மே 27 அன்று 32 வயதான அப்துல் ரஹ்மான் என்பவர் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வரும் பந்த்வால் கிராமப்புற போலிஸார், ஆர்எஸ்எஸ் தலைவர் கல்லட்கா பிரபாகர் பட்டுக்கு நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்குமாறு முறைப்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

இக்கொலை வழக்கு விசாரணையின் போது வெளிவந்த சில முக்கியமான உண்மைகளைச் சரிபார்ப்பதற்காகக் கல்லட்கா பிரபாகர் பட்டின் வாக்குமூலம் பெறப்பட வேண்டியது அவசியமாக உள்ளது என்றும், அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்த பின்னரே நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலிஸார் நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளபடி சனிக்கிழமையன்று நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டிய நிலையில், தனக்கு ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகள் இருப்பதாகக் கூறி, போலிஸார் முன் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கக் கல்லட்கா பிரபாகர் பட் 1 மாதம் கால அவகாசம் கேட்டுள்ளார். பந்த்வால் கிராமப்புற காவல் நிலையத்தில் பதிவான இந்த வழக்குத் தொடர்பாக போலிஸார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

காவல்துறையில் இப்படியொரு கொடூரமா?…. பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த எஸ்.எஸ்.ஐ…. நெல்லையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!

திருநெல்வேலி அருகே அரசுப் பணியை முடித்துத் திரும்பிய பெண் காவலருக்குப் பாலியல் தொல்லை அளித்த சிறப்பு உதவி ஆய்வாளர் கைது…

2 minutes ago

“ஒத்த ஆளை எதிர்க்க 36 கட்சிகளா?….. ஆட்சியை கலைச்சுத் தான் பாருங்களேன்”…. கொதித்தெழுந்த ஆதவ் அர்ஜுனா…. கலக்கத்தில் எதிர்க்கட்சிகள்…..!

சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழக அரசியலில் இதுவரை எந்த ஒரு தலைவருக்கும் இல்லாத வகையில்…

9 minutes ago

“மனைவியை வெட்டித் தலையுடன் காளி கோயிலுக்குப் போன கணவர்”…. பக்கத்தில் அமர்ந்திருந்த குழந்தைகள்…. மேற்கு வங்கத்தில் அரங்கேறிய நெஞ்சை உறைய வைக்கும் கொடூரம்….!

மேற்கு வங்க மாநிலம் தெற்கு தினாஜ்பூர் மாவட்டம் கங்காராம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ரிண்டு சர்க்கார் (46), அரசு பேருந்து நடத்துநராகப்…

24 minutes ago

“நண்பனின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு…” தடுக்க வந்த நண்பனின் நெஞ்சில் பாய்ந்த கத்தி… நொடியில் நடந்த பயங்கரம்… பரபரப்பு…!!

தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே மனைவியின் முன்னாள் காதலனுடன் ஏற்பட்ட கள்ளக்காதல் தகராறில், இருவரையும் சமாதானம் செய்யச் சென்ற நண்பர்…

34 minutes ago

குங்குமம் வைத்த மனைவி…! காருக்குள் கணவருக்கு வலுகட்டாயமாக சுன்னத்…! சித்தரவதை செய்த குடும்பத்தினர்… பரபரப்பு பின்னணி..!!!

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அகில் குமார் சந்தக் என்பவர், கடந்த 2019-ஆம் ஆண்டு டெல்லியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நூர்ஷிகா…

1 மணத்தியாலம் ago