செல்போனை எடுக்காத காவல் உதவி ஆய்வாளர்…! “அந்த” காட்சியை கண்டு பதறிய சக போலீஸ்…. பேரதிர்ச்சி சம்பவம்…!!

By Devi Ramu on ஐப்பசி 5, 2025

Spread the love

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி பகுதியைச் சேர்ந்தவர் சக்தி. இவரது மனைவி லட்சுமி பிரியா. இந்த தம்பதியினருக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். கணவன் மனைவி இருவருமே காவல்துறையில் வேலை பார்த்து வந்தனர். தற்போது லட்சுமி புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடி காவல் நிலையத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 4-ஆம் தேதி காவல் நிலையத்தில் அணிவகுப்பு நடைபெற்ற போது உதவி ஆய்வாளான லட்சுமி நீண்ட நேரமாக வரவில்லை. இதனால் சக போலீசார் வீட்டிற்கு சென்று பார்த்தனர்.

கதவை திறக்காததால் உரிமையாளரின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த சக போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. லட்சுமி பிரியா தனது காவல் சீருடை அயன் பாக்ஸ் மூலம் அயன் செய்துள்ளார். அப்போது மின்கசிவு காரணமாக மின்சாரம் தாக்கி லட்சுமி பிரியா சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்தது தெரியவந்தது. அவரது உடலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.