சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்கும் பொருட்டு, நள்ளிரவில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் அண்மையில் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதைத் தொடர்ந்து, பல்வேறு பகுதிகளில் சந்து கடைகள் மற்றும் சில தங்கும் விடுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாகப் புகார்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் விஜய்யின் அதிரடி உத்தரவின்பேரில் இந்தத் தீவிரப் பகல்-இரவு சோதனைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இந்தச் சோதனையின் போது, சட்டவிரோத மது விற்பனையைத் தடுப்பதோடு மட்டுமல்லாமல், கஞ்சா மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை யாரேனும் பயன்படுத்துகிறார்களா அல்லது கடத்துகிறார்களா என்பது குறித்தும் சந்தேகத்திற்குரிய நபர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு, சட்ட ஒழுங்கை நிலைநாட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
