Singer Velmurugan

இதெல்லாம் தேவையா கோபால்? – தவெக கட்சி விழாவில் பங்கேற்ற பாடகர் வேல்முருகன் மீது போலீசில் புகார்!

By Elango on மாசி 3, 2026

Spread the love

தமிழ் சினிமாவில் பல பாடல்களை பாடியவர் பாடகர் வேல்முருகன். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்று மக்களின் கவனத்தை பெற்றார். ஆடுங்கடா மசசான் பாடுங்கடா என்ற பாடலை நாடோடிகள் படத்திலும் அடி சிவப்பு நிறத்தழகி பாடலை கொம்பன் படத்திலும் பாடி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றார்.

இந்நிலையில் நேற்று தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் 3ம் ஆண்டு துவக்க விழா சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. இந்த விழாவில் பங்கேற்று பாடிய பாடகர் வேல்முருகன், மிகவும் பிரபலமான முருகப்பெருமானின் பக்தி பாடலை விஜயை பாராட்டும் விதமாக இடையிடையே மாற்றிப் பாடினார். இவரது பாடலுக்கு விஜய் மேடைக்கு வந்து நடனமும் ஆடினார். இந்நிலையில் கடவள் பாடலை அவமதித்ததாக பாடகர் வேல்முருகன் மீது நெல்லையைச் சேர்ந்த குற்றால நாதன் என்பவர் புகார் அளித்துள்ளார்.