சம்மனை புறக்கணித்த செந்தில் பாலாஜி.. அடுத்து நடக்கப்போவது இதுதான்….. போலீசாரின் ரகசிய ‘ஸ்கெட்ச்’…. திருவல்லிக்கேணியில் பரபரப்பு…..

Spread the love

தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க. ஆட்சியை கவிழ்ப்பதற்கு சதித்திட்டம் தீட்டப்பட்டு, அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்களிடம் குதிரை பேரம் நடத்தப்படுவதாக அமைச்சர் நிர்மல்குமார் சமீபத்தில் பரபரப்பு தகவல்களை வெளியிட்டிருந்தார். இதன் தொடர்ச்சியாக, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. டாக்டர் இளையராஜா, தன்னிடம் ஆட்சியை கவிழ்க்க ரூ.35 கோடி தருவதாக சிலர் பேரம் பேசியதாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அதிரடி புகார் ஒன்றை அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் சென்னை திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையில் இறங்கினர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையை அடுத்து, த.வெ.க. எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் ரூ.35 கோடி பேரம் பேசிய விவகாரத்தில், ஐ.பி.டி.எஸ். என்ற தேர்தல் கருத்துக்கணிப்பு நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல யூடியூபருமான திருநாவுக்கரசு உட்பட 9 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். கைதானவர்களிடம் நடத்தப்பட்ட ரகசிய விசாரணையில், தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும், அவரது சகோதரர் அசோக்குமாரும் கொடுத்த அறிவுரையின் பேரில் தான் இந்த ரூ.35 கோடி பேரத்தில் ஈடுபட்டதாக அவர்கள் வாக்குமூலம் அளித்ததாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகிய இருவரையும் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு திருவல்லிக்கேணி போலீசார் சம்மன் அனுப்பினார்கள். அந்த சம்மனில் ஜூலை 6-ந்தேதி (நேற்று) ஆஜராக வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் நேற்று காலை முதலே பத்திரிகையாளர்களும், யூடியூபர்களும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் பெரும் திரளாகக் குவிந்திருந்தனர். ஆனால், நேற்று இறுதிவரை செந்தில்பாலாஜியோ அல்லது அவரது சகோதரரோ போலீஸ் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

சம்மனைப் புறக்கணித்து செந்தில்பாலாஜி ஆஜராகாத நிலையில், அவர் மீது எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து போலீசார் நேற்று அவசர மற்றும் அதிரடி ஆலோசனையில் ஈடுபட்டனர். இதற்கிடையே, செந்தில்பாலாஜியும் அவரது சகோதரரும் வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்வதைத் தடுக்கும் பொருட்டு, அனைத்து விமான நிலையங்களுக்கும் ‘லுக்-அவுட்’ (Look-out) நோட்டீஸ் அனுப்பி போலீசார் உஷார்படுத்தியுள்ளனர். அவர்களைக் கைது செய்ய தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் அதே வேளையில், அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை சம்மன் அனுப்பலாமா என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

Nanthini

Recent Posts

அம்மாடியோ… இந்த காலத்துல இப்படி ஒரு மருமகளா?… நடக்க முடியாத மாமனாரைத் தோளில் சுமந்து சென்ற பெண்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!

நடக்க முடியாத தனது மாமனாரை மருமகள் ஒருவர் தன் தோளில் சுமந்து செல்லும் நெகிழ்ச்சியான வீடியோ காட்சி தற்போது இணையத்தில்…

7 மணத்தியாலங்கள் ago

இது பள்ளியா?… இல்ல சித்திரவதைக் கூடமா?… 3 வயது பிஞ்சுக் குழந்தையை… கயிற்றால் கட்டித் தாக்கிய ஆசிரியர்… இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் பள்ளியில், மூன்று வயது ப்ரீ-கேஜி மாணவன் ஆசிரியர் மற்றும் பள்ளி உதவியாளரால் தாக்கப்பட்ட…

7 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… உயிருள்ள பாம்பைக் கழுத்தில் சுற்றி சாகசம்… பூஜையின் போது கடித்ததில் பிரபல… பாம்பு பிடிப்பவர் பரிதாப பலி…!

மேற்கு வங்க மாநிலம் ஜார்கிராம் பகுதியைச் சேர்ந்த பிரபல பாம்பு பிடிப்பவரான ‘சர்பபந்து’ என்பவர், செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற மானசா…

7 மணத்தியாலங்கள் ago

பலமுறை நடந்த கொடூரம்… வெளிவந்த உண்மை… சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவர்… நீதிமன்றம் எடுத்த முடிவு என்ன தெரியுமா?…!!

ஆசை வார்த்தை கூறி சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 55 வயது முதியவருக்கு, போக்சோ சிறப்பு நீதிமன்றம் கடுமையான…

7 மணத்தியாலங்கள் ago

என் கணவனுடனா பழகுகிறாய்?… உன்னை உயிரோடு விடமாட்டேன்… ரூ 13 லட்சம் கூலிப்படையை ஏவி… தோழியைத் தீர்த்துக்கட்டிய மனைவியின் வெறிச்செயல்…!!

மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் 35 வயதான வர்ஷா துர்கர் என்ற விமான நிறுவன ஊழியர் கொலை…

7 மணத்தியாலங்கள் ago

கடவுளே… கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா?… வீட்டு வாசல் சாக்கடைக்குள் விழுந்த வியாபாரி… காப்பாற்றாமல் வேடிக்கை பார்த்த பொதுமக்கள்… இணையத்தில் நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள சகேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், மனிதநேயமற்ற அலட்சியத்தால் ஒரு துயரச் சம்பவம்…

7 மணத்தியாலங்கள் ago