திமுக கூட்டணியில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தானாக வெளியேறவில்லை என்றும், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) துணிச்சலான முடிவை ஏற்றுக்கொண்டே அந்த கட்சிக்கு ஆதரவு அளித்ததாகவும் விசிக தலைவர் தொல். திருமாவளவன் புதிய விளக்கமளித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், சட்டசபை தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக வென்றது வேறொரு கூட்டணியில் இருந்த தங்களுக்கு எப்படி மகிழ்ச்சியைத் தரும் என்ற கேள்வியோடு தனது உரையைத் தொடங்கினார். இருப்பினும், அதிமுக போன்ற கட்சிகளைத் தவிர்த்துவிட்டு, மதச்சார்பற்ற சக்தியாக விளங்கும் தங்களை அழைத்து ஆதரவு கேட்டது தவெகவின் துணிச்சலான முடிவு என்று அவர் பாராட்டினார்.
திமுக கூட்டணியில் விசிக இல்லை என்று திமுக தலைமைதான் அறிவித்ததே தவிர, தாங்களாகக் கூட்டணியை விட்டு விலகவில்லை என்று திருமாவளவன் தெளிவுபடுத்தியுள்ளார். தவெக அமைச்சரவையில் விசிகவுக்கு இடம் ஒதுக்கிய போதே, திமுக தலைவர்கள் அனைவரும் ஒன்றுகூடி விசிகவுடன் தங்களுக்கு இனி உறவில்லை எனக் கூறினர். திமுக கூட்டணியில் விசிக இல்லை என முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் சொன்னாரே தவிர, தான் ஒருபோதும் அந்த நட்பை சிதைக்கவில்லை என்றும், அவர் மீதான மதிப்பு என்றைக்கும் குறையாது என்றும் கூறினார். மேலும், தான் தவெக கூட்டணியில் இருப்பதாக இன்னும் அறிவிக்கவில்லை என்றும், இனி தவெக தலைமையில் கூட்டணி உறுதியானால் மட்டுமே அந்த கூட்டணியில் இடம் பெறுவோம் என்றும் குறிப்பிட்டார்.
தேர்தலுக்கு முன்பாக எத்தனையோ ஆசை வார்த்தைகள் வந்தபோதும், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பலவீனப்பட ஒருபோதும் இடம் தரக் கூடாது என்பதில் தான் உறுதியாக இருந்ததாக திருமாவளவன் சுட்டிக்காட்டினார். தவெகவுக்கு ஆதரவு அளிப்பதற்கு முன்பே அதுகுறித்த தகவலை திமுக தலைமைக்கு முறையாகத் தெரிவித்ததாகக் கூறிய அவர், தான் திமுகவுக்கு எந்தத் துரோகமும் இழைக்கவில்லை என்றும், தனது நட்பு எவ்வளவு தூய்மையானது என்பது அனைவருக்கும் தெரியும் என்றும் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார். குதிரை பேரம் போன்ற விவகாரங்களில் ஆளுநருக்கு அதிகாரம் இருந்தால் அவர் தலையிட வேண்டும் என்றும் இந்த நிகழ்வில் அவர் வலியுறுத்தினார்.
தன் மீதான விமர்சனங்களுக்குப் பதிலளித்த திருமாவளவன், விசிக ஏன் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடவில்லை என்றோ, அதற்கான வலிமையை ஏன் தனக்குக் கொடுக்கவில்லை என்றோ யாரும் விவாதிப்பதில்லை எனக் குமுறினார். தனது அரசியல் நகர்வுகளில் ஏற்பட்ட தாமதத்தை சோபா, பார்ட்டி ஃபண்ட், துணை முதல்வர் அல்லது முதல்வர் பதவிக்கான பேரமாகப் பலரும் விமர்சிப்பதாகக் குறிப்பிட்ட அவர், தனக்கு வந்த அத்தகைய பெரிய வாய்ப்புகளைத் தான் நிராகரித்ததாகக் கூறினார். சில அரசியல் விவகாரங்களை தம்மால் வெளிப்படையாகப் பேச முடியாது என்றும், அவ்வாறு பேசினால் அது நாகரிகமாக இருக்காது என்றும் கூறி தனது விளக்கத்தை திருமாவளவன் நிறைவு செய்தார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ முஸ்தபா மற்றும் தவெக அரசை கடுமையாக விமர்சித்து…
அரசியல் களத்தில் தனக்கெனத் தனிப்பாதையை அமைத்து, மாற்று அரசியலை முன்வைத்து ஆட்சியைப் பிடித்த தமிழக வெற்றி கழகம் அரியணை ஏறி…
சென்னை ஆவடி பகுதியில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.…
திருநெல்வேலி அருகே அரசுப் பணியை முடித்துத் திரும்பிய பெண் காவலருக்குப் பாலியல் தொல்லை அளித்த சிறப்பு உதவி ஆய்வாளர் கைது…
சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழக அரசியலில் இதுவரை எந்த ஒரு தலைவருக்கும் இல்லாத வகையில்…
மதுரை முன்னாள் துணை மேயரும், அதிமுக கொள்கைப் பரப்புத் துணைச் செயலாளருமான பி.எம். மன்னன், தவெக ஆட்சியை கவிழ்க்க ரூ.30…