நண்பர் மூலம் மிளகாய் பொடி வாங்கி அஜித்குமாரை சித்ரவதை செய்த போலீசார்.. வெளியான அதிர்ச்சி தகவல்…!

By Srimathi on ஆவணி 8, 2025

Spread the love

சிவகங்கை மாவட்டத்தில், பத்ரகாளியம்மன் கோவிலுக்கு தரிசனத்திற்கு வந்த நதியா என்ற பெண்ணின் நகைகள், காரில் வைத்திருந்த போது காணாமல் போனது. அதைப் பற்றி கிடைத்த புகாரின் பெயரில், அங்கு பணியாற்றி வந்த காவலாளி அஜித்குமார், குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து சி.பி.ஐ  அதிகாரிகள், கண்ணன், ஆனந்த், பிரபு, சங்கர் மணிகண்டன், ராஜா என ஐந்து போலீஸார்கள் கைது செய்யப்பட்டு, 2 நாட்கள் காவலில் வைத்து விசாரணை நடத்தினர்.

அப்பொழுது அவர்களிடம் அஜித் குமாரை கொடூரமாக தாக்க உத்தரவிட்டது யார்? அவர் விசாரணைக்காக எங்கு அழைத்துச் செல்லப்பட்டார்? அப்போது என்ன நடந்தது? என சரமாரியாக சி.பி.ஐ அதிகாரிகள் போலீசாரை விசாரித்தனர். மேலும் அவர்கள் கொடுத்த தகவல்களை வீடியோவாக பதிவு செய்து கொண்டனர்.

   

கடந்த 25 நாட்களாக நடைபெற்று வரும் சி.பி.ஐ விசாரணையில் அஜித்குமாரை கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்டதுக்கான ஆதாரங்களும், பிரேத பரிசோதனையில் அவரது உடலில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் காயங்கலும்  இருந்ததாக தெரியவந்தது. மிளகாய் பொடியை பயன்படுத்தி, அவரை சித்திரவதை செய்துள்ள நிலையில், மிளகாய் பொடி.. எங்கு? எப்போது வாங்கப்பட்டது? என்று விசாரித்தனர்.  இதில் அக்கோயிலுக்கு அருகில் உள்ள மளிகை கடையில் அஜித்குமாரின் நண்பர் ஒருவர், காவல்துறையினர் கூறியதாக சொல்லி மிளகாய் பொடியை வாங்கிக் கொடுத்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.