சகல வரங்களையும் அள்ளிக்கொடுக்கும் வரலட்சுமி விரதம் எப்படி உருவானது தெரியுமா..? இந்த புராண கதையை படித்து பாருங்கள்…!!

By Meena on ஆவணி 8, 2025

Spread the love

வரலட்சுமி விரதம் என்பது கணவருக்கு நீண்ட ஆயுள் வேண்டியும் குழந்தை பாக்கியம் வேண்டியும் அதிர்ஷ்ட ஐஸ்வரியம் கிடைக்க வேண்டிய சுமங்கலி பெண்கள் எடுக்க வேண்டிய விரதமாகும். ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தில் வரும் பௌர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் எடுக்கப்படுகிறது. தமிழ்நாட்டுப் பெண்கள் எடுக்க வேண்டிய முக்கிய விருந்தகங்களில் இந்த வரலட்சுமி விருதமும்  ஒன்று . இந்த வரலட்சுமி விரதம் எப்படி உருவானது என பல புராண கதைகள் சொல்வதுண்டு.

மகத நாட்டில் குந்தினபுறம் என்ற கிராமத்தில் சாருமதி என்ற பெண் ஒருவர் தன் கணவன் மாமனார் மாமியார் ஆகியோரோடு சந்தோஷமாக வசித்து வந்தார். சாருமதி தினமும் வரலட்சுமி தேவியை வழங்குவது வழக்கமாக வைத்துக் கொண்டிருந்தார். மேலும் தன் குடும்பத்தினர்களை இறை அம்சமாக கருதி அவர்களுக்கு பணிவிடை செய்தும் வந்துள்ளார். இதனைப் பார்த்து மனம் மகிழ்ந்த வரலட்சுமி அவளது கனவில் தோன்றி உனது பக்தியால் நான் மனம் மகிழ்ந்துள்ளேன் என்னை நினைத்து வரலட்சுமி விரதம் எடுப்போருக்கு அவர்களது இல்லத்தில் நான் குடியேறுவேன் என்றும். வரலட்சுமி விரதத்திற்கான வழிமுறைகளையும் தேவி கூறியுள்ளார். அடுத்த நாள் காலையில் எழுந்த சாருமதி. தன் கனவில் வந்தால் வரலட்சுமி தேவியை பற்றி தன் குடும்பத்தினரிடம் கூறினாள்.

   

இதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த குடும்பத்தினர் இந்த வரலட்சுமி விரதத்தை எடுக்க வேண்டும் என்று உறுதி கூறினர். அதன்படி விரதம் இருந்து வரலட்சுமி அருளையும் பெற்றுள்ளனர். இவர் விரதம் இருந்து பெற்ற நன்மைகளை பார்த்து அந்த நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் அந்த வரலட்சுமி விரதத்தை எடுக்க தொடங்கினார்கள். மேலும் பத்ரச்ரவஸ் என்ற மன்னன் மகாவிஷ்ணுவின் தீவிர பக்தனாக இருந்தவர். அவரது மனைவி சுரச்சந்திரிகா. இருவருக்கும் சியாமபாலா என்ற மகளும் உள்ளார். இவளை சக்கரவர்த்தியான மாலச்சரன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.

   

தன் மகள் மீது கொண்ட அன்பினால் சிவசந்திரிக்கா அவளது பிரிவை தாங்க முடியாமல் சோகத்தில் இருந்தாள். ஒரு நாள் சுரச்சந்திரிக்காவின் அரண்மனைக்கு மகாலட்சுமி தேவி வயதான சுமங்கலியின் வேடத்தில் வந்துள்ளார். சுரச்சந்திரகாவை பார்த்து வரலட்சுமி விரதத்தை எடுக்குமாறு கூறியுள்ள நிலையில் அதை கடைபிடிக்கவும் சொன்னார். ஆனால் தன் மகளை பிரிந்த சோகத்தினால் இருந்த சுரசந்திரிகா லட்சுமி தேவியை பார்த்து பிச்சை கேட்டு வந்திருப்பதாக நினைத்து அவமானப்படுத்தி வெளியே விரட்டப்பட்டாள்.

 

விரட்டப்பட்ட லட்சுமி தேவியை அரசின் மகளான சியாமபாலா சமாதானப்படுத்தினாள் . இதனையடுத்து லட்சுமிதேவியிடம் இருந்து வரலட்சுமி விரதம் எடுப்பதற்கான முறைகளை கேட்டு அதன்படி விரதத்தையும் எடுத்து விரதத்திற்கான மகிமையையும் , செல்வத்தையும் பெற்று சிறப்பாக வாழ்ந்து வந்துள்ளார் . ஆனால் லட்சுமி தேவியை அவமானப்படுத்திய அவளது குடும்பத்தினர் எல்லாவற்றையும் இழந்து வறுமையில் வாழத் தொடங்கினர். தன் குடும்பத்தின் நிலை அறிந்த சியாமபாலா ஒரு குடம் நிறைய தங்கத்தை குடும்பத்தினருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

ஆனால் அங்கிருந்து அனுப்பிய தங்கம் அனைத்தும் அவர் செய்த தீவினையால் கறியாக மாறியுள்ளது. இதைக் கேள்விப்பட்ட வருந்திய சியாமபாலா, தன் தாயிடம் வரலட்சுமி விரதத்தை பற்றி கூறியுள்ளார். அவளும் மகள் சொன்னபடி வரலட்சுமி விரதத்தை எடுத்து விரதத்திற்கு பலனாக இழந்த செல்வங்களை மீண்டும் பெற்று மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர். சித்ராநேமி என்பவள் தேவ குல பெண் நீதிபதியாக இருந்தவள். இவர் தேவர்களுக்கிடையே ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் நடுவராக இருந்து தீர்ப்பு கூறுபவர். ஒரு நாள் கைலாயத்தில் சிவபெருமானும், பார்வதி தேவியும் சொக்கட்டான் ஆடிக் கொண்டிருந்தனர்.

அப்போது பார்வதி தேவி ‘நாதா நான் உங்களை ஜெயித்து விட்டேன்’ என்று கூறியுள்ளார் ஆனால் அதை மறுத்த சிவபெருமான். இருவர் கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இறுதியாக இருவரும் சித்திரநேமிடம் இதற்கான தீர்வை கேட்டபோது அவள் பரமசிவன் தான் போட்டியில் வென்றுள்ளார் எனக் கூறினால். இதனால் கோபமடைந்த பார்வதி தேவி” நீ பொய் சொன்னதால் குஷ்டரோகியாகி பொலிவிழந்து  தவிப்பாயாக” என்று  சாபமிட்டால். இதனையடுத்து தன்னை மன்னித்து அருள் வேண்டிய சித்திரநேமி. மனமிரங்கிய பார்வதி தேவி நதிக்கரையில் வரலட்சுமி விரதம் இருந்து என்னை வழிபட்டால் உனக்கு ஏற்பட்ட இந்த நிலை மாறும் என்று சாப விமோசனம் கொடுத்தார்.