இனி எவனும் ஏமாத்த முடியாது… நிம்மதியா இருக்கலாம்… சைபர் கிரிமினல்களுக்கு ஷாக் கொடுத்த மத்திய அரசு…!

By Nanthini on ஆவணி 12, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு என்னதான் எச்சரிக்கை விடுத்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக போலி அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் மூலமாக அதிக அளவிலான மோசடிகள் நடைபெறுகிறது.

இப்படியான நிலையில் சைபர் கிரிமினர்களுக்கு மத்திய அரசு ஷாக் கொடுத்துள்ளது. அதாவது சைபர் கிரிமினல்களின் சிம் கார்டுகளை உடனே முடக்க எஸ்.பி-களுக்கு அதிகாரம் அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும் சந்தேகத்திற்கு உரியவர்களின் லொகேஷன்கள், வங்கி மற்றும் தொலைபேசி விவரங்களை உடனடியாக அனைத்து போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பவும், சைபர் குற்றங்கள் தொடர்பாக நாடு முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த திட்டம் முதல் கட்டமாக தெலுங்கானாவில் அமல்படுத்தப்பட உள்ள நிலையில் தொடர்ந்து நாடு முழுவதும் அமலாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.