சென்னை போத்தீஸ் துணிக்கடையில் துணிகளை எடுத்துக்கொண்டு, பிரகாஷ் தனது தாய் மற்றும் தங்கையுடன் ஆக்டிவா டியோ வாகனத்தில் வீட்டிற்குப் புறப்பட்டார். தலைக்கவசம் அணியாமல் சென்றதுடன், ஒரே இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்த உதவி ஆய்வாளர், விதிகளை மீறியதாகக் கூறி பிரகாஷை சட்டையைப் பிடித்து இழுத்துச் சென்றுள்ளார்.
தன் மகனைத் தரதரவென இழுத்துச் செல்வதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாய், உதவி ஆய்வாளரைத் தடுத்து நிறுத்த முயன்றுள்ளார். “ஐயா, என் மகனை விட்டுவிடுங்கள்” என்று அவர் கதறி அழுதபடி கெஞ்சியுள்ளார். ஆனால், அந்தத் தாயின் கோரிக்கையைப் பொருட்படுத்தாத உதவி ஆய்வாளர், ஆத்திரத்தில் அவரை ஓங்கி அடித்துள்ளார்.
சென்னை போத்தீஸ் துணிக் கடையில் துணி வாங்கி விட்டு, தன் தாய் மற்றும் தங்கையோடு ஆக்டிவா டியோ வாகனத்தில் வந்துள்ளார் பிரகாஷ். ஹெல்மெட் அணியவில்லை.
மூன்று பேர் அமர்ந்து சென்று, ஹெல்மெட்டும் அணியாததால், பிரகாஷ் சட்டையை பிடித்து அழைத்துச் செல்கிறார் அந்த உதவி ஆய்வாளர். பிரகாஷின்… pic.twitter.com/EfQSCmvR90
— anushiya (@anushiyaxx) April 14, 2026
தன் கண் முன்னே தாய் தாக்கப்படுவதைக் கண்டு ஆவேசமடைந்த பிரகாஷ், உடனடியாக அந்த உதவி ஆய்வாளரின் சட்டையைப் பிடித்துத் தடுத்தார். இந்த தள்ளுமுள்ளுவில் உதவி ஆய்வாளரின் சீருடையில் இருந்த நட்சத்திரம் (Star) கீழே விழுந்தது. காவல்துறையினரின் இந்த அத்துமீறல் மற்றும் இளைஞர் மீதான தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
