தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், முதலமைச்சருமான விஜய் குறித்து சர்ச்சைக்குரிய முறையிலும், இரட்டை அர்த்தத்திலும் அவதூறாகப் பேசியதாக எழுந்த புகாரின் பேரில், ரிஷிவந்தியம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் மீது கள்ளக்குறிச்சி காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. முன்னதாக, இதே விவகாரத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மற்றும் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு ஆகிய இருவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது 3-வது முக்கிய திமுக பிரமுகராக வசந்தம் கார்த்திகேயன் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவர் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது குறித்து முதலமைச்சர் விஜய் பேசிய கருத்துகளும், அவரது உடல் மொழியும் தவறான முறையில் இருந்ததாக திமுக தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதைக் கண்டித்து, கட்சித் தலைமையின் அறிவுறுத்தலின்படி தமிழகத்தின் பல பகுதிகளில் திமுகவினர் தொடர் கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இதில் சென்னையில் நடைபெற்ற போராட்டத்தின் போது, முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் ஆகியோரை அவதூறாகப் பேசியதாக எழுந்த புகாரில் சேகர்பாபு மற்றும் ஆ.ராசா ஆகியோர் மீது ஏற்கனவே வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக, கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி கள்ளக்குறிச்சி அம்பேத்கர் சிலை அருகே திமுக சார்பில் நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில், கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டச் செயலாளரும் ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ-வுமான வசந்தம் கார்த்திகேயன் பங்கேற்றுப் பேசினார். அப்போது, கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக விஜய் ஏன் கருத்து தெரிவிக்கவில்லை எனக் கேள்வி எழுப்பியதோடு, அவர் குறித்து தரக்குறைவான மற்றும் இரட்டை அர்த்தங்கள் கொண்ட வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த உரை அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, பெரும் சர்ச்சையை உருவாக்கியது.
வசந்தம் கார்த்திகேயனின் பேச்சு இரு தரப்பினரிடையே மோதலைத் தூண்டும் வகையிலும், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலும் அமைந்திருப்பதாக தமிழக வெற்றிக் கழகத்தின் கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர். தவெக அளித்துப் புகாரின் அடிப்படையில், ஆபாசமாகப் பேசுதல், அவதூறு பரப்புதல், வன்முறையைத் தூண்டுதல் மற்றும் மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வசந்தம் கார்த்திகேயன் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…
சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…
பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…
ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நோய்டாவில், சாலையில் விபத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய நபர் ஒருவரைப் பெண்மணி…
பிரான்சில் நடைபெற்ற போராட்டங்களின் போது லூயிஸ் வியூட்டன் கடை மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது சமூக வலைதளங்களில் வைரலானது.…