திருப்பூர் மாவட்டம், ஆம்பூரை சேர்ந்த முபாரக் பாஷா மமுஹமதுபுறா மசூதிக்கு அருகில் பேன்சி ஸ்டோரை நடத்தி வருகிறார். கடந்த 31ஆம் தேதி, கடைக்கு சென்ற வேலையில் மனைவி சுல்தானா மற்றும் மகள் தனியாக வீட்டில் இருந்துள்ளனர். இதை அறிந்த மர்ம நபர்கள், புர்கா அணிந்து திருமண அழைப்பிதழ் வைப்பது போல வீட்டிற்குள் நுழைந்து கத்தியை காட்டி மிரட்டி, அவர்களிடம் நகை மற்றும் பணத்தை பறிக்க முயன்றனர். அவரது மகள் கத்திய போது அவர் வாயில் துணியை வைத்து அடைத்து அருகில் உள்ள அறையில் பூட்டியுள்ளனர்.
பின் பூட்டி இருந்த பீரோவை உடைத்து 30 சவரன் தங்க நகை மற்றும் 5 லட்சம் பணத்தை கொள்ளையடித்து தப்பிவிட்டனர். இது குறித்து கிடைத்த புகாரின் பெயரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து கொள்ளை சம்பவம் நடந்த வீட்டை ஆய்வு செய்தனர்.
கொள்ளையடிக்க வந்த நபர், கொண்டு வந்த திருமண அழைப்பிதழ் பொய்யானது என்று தெரியவந்தது.
பின் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில் சுல்தானாவின் தங்கை கணவர் தன்வீர் அகமது என்பவர் மீது போலீசுக்கு சந்தேகம் ஏற்பட்டது. போலீசாரின் விசாரணையில் கொள்ளைச் சம்பவம் நடத்தியதை ஒப்புக்கொண்டார். உடனே அவரை கைது செய்து 30 சவரன் தங்க நகையை பறிமுதல் செய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்தனர். கொள்ளை சம்பவம் நடந்து 5 நாட்களில் குற்றவாளியை பிடித்த காவலர்களை காவல் கண்காணிப்பாளர் அழைத்து பாராட்டினார்.
தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக எதிர்கொள்ளும் இந்தச் சவால்கள் அதன் வெற்றியைத் தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாக உருவெடுத்துள்ளன.…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 107 இடங்களில் முன்னிலை…
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு நிலநடுக்கத்தை ஏற்படுத்தியுள்ள சூழலில், 107 இடங்களில் முன்னிலை பெற்றுள்ள நடிகர்…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய வெற்றியை நோக்கிப் பயணிக்கும் நிலையில், முதலமைச்சர் மு.க.…
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி, தமிழக அரசியலில் முன் எப்போதும் இல்லாத ஒரு பரபரப்பான சூழல் நிலவுகிறது. நடிகர்…
ஜோதிட சாஸ்திரத்தின்படி, அறிவு மற்றும் புத்திசாலித்தனத்தின் காரணியாக விளங்கும் புதன் பகவான், மே 2026-ல் தனது இடத்தைப் மாற்றுகிறார். இந்த…