வீடு வீடா போய் பிச்சை எடுக்குறாங்க, திமுக பரிதாப நிலைக்கு போயிடுச்சு… ஸ்டாலினை பங்கமாக கலாய்த்த இபிஎஸ்…!

Spread the love

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 9 மாதம்  உள்ள நிலையில், மக்களை சந்திக்க அரசியல் கட்சிகள் களம் இறங்கியுள்ளது. “தமிழகத்தை மீட்போம் மக்களை காப்போம்” என பிரச்சார பயணத்தை தொடங்கியுள்ள அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, நெல்லையில் பொது மக்களிடம் திருநெல்வேலி அதிமுக கோட்டை எனவும், வருண பகவான் அருள் புரிந்துவிட்டார் என்றும், பாளையங்கோட்டையிலிருந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு நீங்கள் அனுப்ப வேண்டும் என்று உரையாடினார்.

தொடர்ந்து பேசிய அவர், திமுக கூட்டணி பலமான கூட்டணி என்று போகிற இடமெல்லாம் திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகிறார். அது எப்போது வேண்டுமானாலும்  உடையும், கூட்டணியை நம்பி இருப்பவர்கள் திமுகவினர். நாங்கள் மக்களை நம்பி இருக்கிறோம், நீங்கள் தான் என் எஜமானிகள், கூட்டணி அவ்வப்போது மாறும் ஆனால் மக்கள் எடுக்கும் முடிவே நிலையானது, உங்கள் நல் முடிவின் படி அதிமுக கூட்டணியே  வெல்லும். திமுகவின்  50 மாத ஆட்சியில் மக்கள் துன்பப்படுகிறார்கள்.

நாங்கள் அறிவித்த அறிவிப்புகளை 98% நிறைவேற்றினோம் என்று பச்சை பொய் கூறுகிறார்கள். மத்திய அரசை குறை கூறும் அவர்கள் உண்மையில் மக்கள் மீது அக்கறை இருந்தால் நிறைய நல்திட்டங்களை செய்திருக்கலாம். ஆனால் அவர்கள் எதுவுமே செய்யாமல் எப்பொழுதும் பாஜகவே எதுவும் செய்யவில்லை என்று குறை கூறுகிறார்கள். திமுக, கிடைத்த வாய்ப்பை ஏன் பயன்படுத்தவில்லை? அதிமுக பாஜக கூட்டணிக்கு திமுகவை வீழ்த்துவது ஒரே நோக்கம். திமுக கூட்டணி ஜெயிக்காது என்றும் அதிமுக பாஜக கூட்டணியை வெல்லும் என்று ஸ்டாலினே  நம்பி விட்டார்.

தொண்டர்கள் இல்லாத கட்சி என்ற பரிதாப நிலைக்கு திமுக போய்விட்டது. அதனால் வீடு வீடாகச் சென்று உறுப்பினர் சேர்க்கை பிச்சை எடுக்கிறார்கள். ஓடிபி விவகாரத்தில் நீதிமன்றம் தடை விதித்தது மேல்முறையீடு செய்தும், உச்ச நீதிமன்றம் சென்ற போதும், அங்கேயும் தள்ளுபடி செய்துள்ளனர். அதிமுக ஆட்சியில், இக்கட்டான காலகட்டத்தில் கூட விலைவாசி உயரவில்லை. இன்று எல்லா பொருட்களில் விலை உச்சத்தை தொட்டுவிட்டதால் மக்கள் தவிக்கின்றனர். திமுக ஒரு பரம்பரை கட்சி. இதில் வாரிசுகளுக்கு தான் பதவி கிடைக்கும்.

கட்சித் தலைவராக ஸ்டாலின், மகளிர் அணி தலைவராக கனிமொழி, இளைஞர் தலைவராக உதயநிதி என்று அனைவரும் தன் குடும்பத்தை சார்ந்தவரையே  பொறுப்பில் வைத்திருக்கிறார். ஆனால் சொத்துக்களை விற்று கட்சி வளர்த்த அதிமுகவில், கிளைச் செயலாளர் கூட பொதுச் செயலாளர் ஆக முடியும் ஏன் முதல்வர் கூட ஆக முடியும். அதிமுகவின் பாதையை சரியான பாதை. திறந்து வைக்கப்பட்ட, பாளையங்கோட்டையில் உள்ள 8 விளையாட்டு அரங்குகளும் பூட்டி கிடைக்கின்றனர். திருநெல்வேலியில் 37 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டம் அமைக்கப்பட்டு, இதுவரை அமல்படுத்தவில்லை. இவை அனைத்தும் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்படும். மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம், ஸ்டாலினுக்கு குட்-பை என எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Srimathi

Recent Posts

“106 சீட்கள்.. இன்னும் 13 தான் பாக்கி” திரைமறைவில் நடக்கும் மெகா டீல்.. தவெக-விற்கு ஆதரவாக காங்கிரஸ்… தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு..!!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 106 இடங்களை வென்று தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், அக்கட்சியின்…

9 மணத்தியாலங்கள் ago

அமைதியாக வந்து அரியணையைத் தூக்கிய அணில்கள்! ஸ்டாலினையே வீழ்த்திய விஜய்யின்

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிகழ்த்தியுள்ள சாதனை, பல தசாப்த கால…

9 மணத்தியாலங்கள் ago

“வேலை செய்யும் இடத்திற்கே வந்து” கணவர் செய்த அந்த காரியம்… மேடையிலேயே பகிர்ந்த மனைவி… கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!!

பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…

12 மணத்தியாலங்கள் ago

BREAKING: இன்னும் சற்று நேரத்தில் பதவியை ராஜினாமா செய்கிறார் ஸ்டாலின்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…

12 மணத்தியாலங்கள் ago

“எவ்வளவு தான் பொறுத்துக்கொள்வேன்? காதலனைச் சுட்டுக்கொன்ற தாய்… 10 வயது மகளுக்கு 2 ஆண்டாக நடந்த பயங்கரம்… உறைந்து போன போலீஸ்..!!

திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…

12 மணத்தியாலங்கள் ago

திராவிட அரசியலில் மெகா அதிரடி..! திமுக – அதிமுக கைகோர்க்குமா..? தொங்கு சட்டசபை கொடுத்த ஷாக் ரிப்போர்ட்..!!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…

12 மணத்தியாலங்கள் ago