திருவள்ளுவர் மாவட்டத்தை சேர்ந்தவர் ரவி (59). இவர் திருவள்ளுவர் கோர்டில் வக்கீல் தொழில் செய்து வருகிறார். இவருக்கு மகன், 3 மகள்கள் உள்ளதாகவும் இவரது 3வது மகள் திவ்யா(26) வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி இளங்கலை மருத்துவம் பயின்ற பின்னர் முதுகலை மருத்துவ படிப்புக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து பொது மருத்துவம் 2ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். திவ்யா அலைச்சல் காரணமாக டி.ப .சத்திரம் பகுதியில் வாடகைக்கு தனி வீடு எடுத்து வசித்து வந்துள்ளார். அப்போது உடன் பயிலும் தட்சிணாமூர்த்தி என்பவருடன் காதல் மலர்ந்துள்ளது. இந்த விஷயம் பெற்றோருக்கு தெரிய வர முதலில் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை என்றும் பின்னர் இரு குடும்பத்தாரும் கலந்து பேசி படிப்பு முடித்தவுடன் இருவரும் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.
முதுகலை மருத்துவக் கல்லூரி மாணவர் செய்முறை வகுப்புக்காக, ஆஸ்பத்திரிக்கு பணிக்காக செல்லும் பழக்கம் உள்ளது. இந்த வகையில் திவ்யாவும் நேற்று முன்தினம் கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளார். பின்னர் மதியம் 2 மணி அளவில் அவரது அறைக்கு சென்றுள்ளார். இரவு ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். இந்நிலையில் நேற்று காலை தட்சிணாமூர்த்தி, திவ்யாவிடம் பேசுவதற்காக செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சி செய்துள்ளார். தொலைபேசியை எடுக்காததால் சந்தேகம் அடைந்த காதலன் தன் நண்பனுடன் சேர்ந்து திவ்யா தங்கி இருக்கும் இடத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது கதவு உள் பக்கத் தாப்பாள் போட்டிருந்ததால் இருவரும் சேர்ந்து கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றுள்ளனர். அப்போது திவ்யா ஜன்னலின் கம்பியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. அதை பார்த்து காதலன் அதிர்ந்து போய் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார். போலீசார் திவ்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் அந்த அறையை முழுவதுமாக சோதனை செய்து வந்துள்ளனர். கடிதம் ஏதும் சிக்கவில்லை எனவே செல்போன் அடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றன .
இது தொடர்பாக கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் கூறுகையில், இதுபோன்ற எந்த சம்பவம் இதுவரை எங்கள் மருத்துவமனையில் நடந்ததில்லை. மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு நாங்கள் வேலை செய்கிறோம் என்றும் கூறியுள்ளனர். இந்த சம்பவத்தை அறிந்த நண்பர்கள், உடன் பயிலும் மாணவர்கள் அனைவரும் திவ்யாவின் உடலை காண பிணவறைக்கு வந்து சூழ்ந்து கதறி அழுததை பார்க்கவே பரிதாபமாக உள்ளது. இதனைத் தொடர்ந்து கீழ்பாக்க துணை கமிஷனர் ,திவ்யாவின் பெற்றோரிடம் நாங்கள் எங்களால் முடிந்த உதவியை செய்கிறோம் நடவடிக்கை எடுக்கிறோம் என்று தெரிவித்து ஆறுதல் கூறியுள்ளனர்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 106 இடங்களை வென்று தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், அக்கட்சியின்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிகழ்த்தியுள்ள சாதனை, பல தசாப்த கால…
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…
திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…