மெரினா சாலையில் சட்டென நின்ற கான்வாய்….. முதல்வர் விஜய்யை நோக்கி பாய்ந்த கூட்டம்.. பதறிய கமாண்டோக்கள்… உச்சக்கட்ட பதற்றம்….!

By Nanthini on புரட்டாதி 3, 2026

Spread the love

சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் இன்று காலை தமிழக முதல்வர் விஜய்யின் கார் கான்வாய் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வழக்கம் போல நீலாங்கரை இல்லத்தில் இருந்து தலைமைச் செயலகம் நோக்கி முதல்வர் பயணித்துக்கொண்டிருந்தார். முதல்வரைக் காண்பதற்காக சாலையின் இருபுறமும் மக்கள் கூடிநின்ற சூழலில், 17 கிலோமீட்டர் தொலைவிற்கும் காவல்துறையினர் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, காமராஜர் சாலையில் பாதுகாப்பு அரணை மீறி சிலர் திடீரென முதல்வரின் கான்வாய் வாகனங்களுக்கு குறுக்கே ஓடிவந்து காரை முற்றுகையிட முயன்றனர். காரின் அருகே மனு கொடுக்க முயன்றவர்கள், “ஆகாஷ் மரணத்திற்கு நீதி வேண்டும்” என்று உரத்த குரலில் கோஷமிட்டனர். கடந்த ஆட்சியின் போது காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த ஆகாஷ் என்ற இளைஞரின் மரணத்திற்கு நீதி கோரியே இவர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.

   

இச்சம்பவத்தால் முதல்வரின் கார் கான்வாய் சில நொடிகள் உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்டது. ஆபத்தை உணர்ந்த முதல்வரின் சிறப்புப் பாதுகாப்பு கமாண்டோக்களும் காரை விட்டு கீழே இறங்கிச் சூழலைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். அதேவேளையில், அங்கிருந்த காவல்துறையினர் நொடிப் பொழுதில் செயல்பட்டு, குறுக்கே ஓடிவந்த நபர்களை மடக்கிப் பிடித்து இழுத்துச் சென்று அப்புறப்படுத்தினர். இதன் பின்னர் முதல்வரின் கார் அங்கிருந்து பாதுகாப்பாகப் புறப்பட்டுச் சென்றது.

   

தமிழக சட்டப்பேரவையில் இன்று காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றுவரும் நிலையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. காவல் துறை முதல்வரின் நேரடி அதிகார வரம்பிற்குள் வருவதால், இந்த விவாதங்களுக்கு பதிலளித்து வரும் திங்கள்கிழமை முதல்வர் பேச உள்ளார். சட்டமன்றத்தில் காவல்துறை தொடர்பான விவாதம் நடக்கும் நாளிலேயே, காவல் மரணத்திற்கு நீதி கேட்டு முதல்வரின் காரை மறிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.